

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், கோட்டைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் பிப்.16-ம் தேதி முதல் மக்கள் தொடர் போராட் டத்தில் ஈடுபட்டனர். நேற்று 16-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது.
இந்நிலையில், கோட்டைக் காட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக் குழுவினரை, ஆட்சியர் சு.கணேஷ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெ.லோகநாதன் உள்ளிட் டோர் தனியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடன்பாடு ஏற்பட் டதைத் தொடர்ந்து தற்காலிக மாக போராட்டத்தை கைவிடு வதாக அப்பகுதியினர் அறிவித் துள்ளனர்.