Published : 23 Mar 2017 11:48 AM
Last Updated : 23 Mar 2017 11:48 AM

காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டத்துக்கு உட்பட்ட தபால் நிலையங்களில் 20 நாளில் 45 ஆயிரம் சேமிப்பு கணக்குகள் தொடக்கம்: வங்கிகளின் நிபந்தனையால் பொதுமக்கள் ஆர்வம்

காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டத்துக்கு உட்பட்ட தபால் நிலையங்களில் கடந்த 20 நாட்களில் 45 ஆயிரம் பேர் சேமிப்புக் கணக்குகளைத் தொடங்கியுள்ளனர். குறிப்பிட்ட தடவைக்கு மேல் பணம் எடுப் பதில் வங்கிகள் விதித்துள்ள நிபந்தனைகளால், தபால் நிலை யங்களில் கணக்கு தொடங்க பொதுமக்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

வங்கிகளில் சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்கு பல்வேறு நிபந் தனைகள் உள்ளன. ஏற்கெனவே கணக்கு வைத்துள்ளவர்கள் ஒருவர் அறிமுகம் செய்ய வேண்டும். இருப்புத் தொகை ஒரு குறிப்பிட்ட அளவு இருக்க வேண்டும். குறிப் பிட்ட தடவைக்கு மேல் பணம் எடுத் தாலும், போட்டாலும் கட்டணம் என் றெல்லாம் நிபந்தனைகள் உள்ளன.

ஆனால், இந்த நிபந்தனைகள் எதுவும் இல்லாமல் அஞ்சலகங்க ளில் ஆதார் அட்டை நகல் மற்றும் ரூ.50 பணத்துடன் 2 புகைப் படங்களைக் கொடுத்தால், ஏடிஎம் கார்டுடன் சேமிப்புக் கணக்கு உடனடியாக தொடங்கப் படுகின்றன. இந்தக் கணக்கு மூலம் மக்கள் எவ்வளவு வேண்டு மானாலும் சேமித்துக் கொள்ளலாம். இதற்கு 4 சதவீத வட்டி கணக்கிட்டு அளிக்கப்படும்.

ஏடிஎம் கார்டுகளைப் பயன் படுத்தி எந்த வங்கி ஏடிஎம் இயந்திரம் மூலமும் கட்டண மின்றி எத்தனை தடவை வேண்டு மானாலும் பணம் எடுக்க முடியும். இந்தியாவில் உள்ள எந்த தபால் நிலையத்திலும் தங்கள் கணக்கில் பணம் செலுத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்களின் ஆர்வம் காரணமாக, தற்போது அஞ்சல் துறை ஊழி யர்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிறப்பு முகாம் களை அமைத்து, இந்த எளிய நடைமுறைகளையும், பயன் களையும் கூறி அஞ்சலகக் கணக்கு களைத் தொடங்க உதவி செய்து வருகின்றனர்.

இதுகுறித்து காஞ்சிபுரம் கோட்ட உதவி கண்காணிப்பாளர் ராஜூவிடம் கேட்டபோது, ‘தபால் நிலையங்களில் சேமிப்புக் கணக்கு தொடங்கும் நடைமுறை எளிதாக்கப் பட்டுள்ளது. அதேபோல் ஏடிஎம் கார்டுகளும் வழங்குகிறோம். அஞ்சலக ஏடிஎம் கார்டுகள் மூலம் அனைத்து வங்கி ஏடிஎம் இயந் திரங்களிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம். அதற்கு எந்தக் கட்டணமும் கிடையாது.

ரூ.50 செலுத்தினாலே சேமிப்புக் கணக்கு என்பது ஏழை மக்களுக்கு எளிதாக உள்ளது. கடந்த ஜனவரி, பிப்ரவரி 2 மாதங்களில் காஞ்சிபுரம் கோட்டத்தைச் சேர்ந்த காஞ்சிபுரம், திருவள்ளூர், பெரும்புதூர், திருத்தணி ஆகிய பகுதிகளில் 30 ஆயிரம் சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டன. தற்போது மார்ச் மாதத்தில் 20 நாட்களிலேயே 45 ஆயிரம் சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. வங்கிகளில் பணம் எடுப்பதில் உள்ள நிபந்த னைகளால் பொதுமக்கள் தபால் நிலையங்களை நோக்கி வரு கின்றனர். நாங்களும் முகாம் நடத்தி சேமிப்புக் கணக்குகள் தொடங்குவதை ஊக்குவித்து வருகிறோம் என்றார்.

இதுகுறித்து செங்கல்பட்டு கோட்ட அஞ்சல்துறை கண்காணிப் பாளர் ஆர்.அமுதா கூறியதாவது: செங்கல்பட்டு கோட்டத்துக்கு உட்பட்ட அஞ்சலகங்களில் கடந்த 20 நாட்களில் மட்டும் 10 ஆயிரத்து 686 சேமிப்புக் கணக்குகள் தொடங் கப்பட்டுள்ளன. மதுராந்தகம் நகரில் வரும் 26-ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அப்பகுதி மக்கள் இதை பயன்படுத்தி கொள்ளலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x