

அரசு போக்குவரத்து கழகங்களுக்கு இந்த நிதியாண்டில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படு கிறது.
இதுபற்றி பட்ஜெட்டில் கூறியி ருப்பதாவது:
தமிழகத்தில் 20,839 வழித்தடங் களில் 22,948 பேருந்துகள் மூலம் பொதுமக்களுக்கு போக்குவரத்து சேவை அளிக்கப்படுகிறது. மாநகர போக்குவரத்துக் கழகம் மூலம் சிற்றுந்துகளையும் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. பழைய பேருந்துகளுக்கு பதிலாக புதிய பேருந்துகளை மாற்றுவது தொடர் பணியாகும். 2016-17ம் ஆண்டில் பழைய பேருந்துகளை மாற்றி, 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங் குவதற்கு பங்கு மூலதன உத வியாக ரூ.150 கோடியும், கடனுத வியாக ரூ.125 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயண அட்டை திட்டத்தின் கீழ் மாநகர போக்கு வரத்துக் கழகத்தில் இதுவரை 2.49 லட்சம் அடையாள அட்டை கள் வழங்கப்பட்டுள்ளன.
நடப்பு நிதியாண்டில் மாணவர் பயணச்சலுகை கட்டண மானியமாக ரூ.505.35 கோடியும், டீசலுக்கான மானியமாக ரூ.200 கோடியும் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. 2016-17ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் போக் குவரத்துத் துறைக்காக மொத்தம் ரூ.1,295.08 கோடி ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளது.