

முதல்வர் தனிப் பிரிவில் மனு அளிப்பதற்காக சட்டப்பேரவை வளாகத்தில் ஏராளமான பொது மக்கள் திரண்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மனு அளித்தனர்.
சென்னை தலைமைச் செயல கத்தில் முதல்வர் தனிப்பிரிவு உள்ளது. இங்கு பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் தங்களின் குறைகளையும், கோரிக்கை யையும் தெரிவிக்கலாம். அப்படி தெரிவிக்கப்படும், குறைகளையும், கோரிக்கைகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்வர். அவற்றில், தகுதியா னவை முதல்வரின் பார்வையில் சேர்க்கப்படும். இந்நிலையில், 15-வது சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் சட்டப் பேரவையில் நேற்று நடந்தது. அப்போது, ஏராளமான பொது மக்கள் முதல்வர் தனிப்பிரிவில் மனு அளிப்பதற்காக பேரவை வளாகத் தில் நேற்று காலையிலேயே குவிந்தனர். முதல்வர் தனிப்பிரிவில் மனுக்கள் வாங்க ஆரம்பிக்கப்பட்ட போது, மனு அளிப்பதற்காக பெருமளவில் கூட்டம் திரளவே, மனு அளிக்க வந்தவர்களை காவலர்கள் நீண்ட வரிசையில் நிற்க வைத்து, ஒருவர் பின் ஒருவராக மனுக்கள்ளை பெற்றுக் கொண்டனர். நரிக்குறவர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், முதியோர் என சமூகத்தின் பல்வேறு தரப்பட்ட 100-க்கும் அதிகமான பொதுமக்கள் முதல்வர் தனிப்பிரிவில் நேற்றைய தினம் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.