

இன்று வெளியாக உள்ள ‘பாகுபலி-2’ படத்துக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து வழக்கு விசாரணையை இன்று தள்ளி வைத்துள்ளது.
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற் படுத்தியிருக்கும் ‘பாகுபலி-2’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையிடப்படவுள் ளது. இந்த படத்தின் தமிழ் விநியோக உரிமையை கே புரொடக் ஷன் நிறுவன உரிமையாளர் எஸ்.என்.ராஜ ராஜன் பெற்றுள்ளார்.
இந்நிலையில், ‘‘ராஜராஜன் எனக்கு ரூ.1.48 கோடி பணம் தர வேண்டியுள்ளது. ஆகவே, எனது பணத்தை திருப்பித்தரும் வரை ‘பாகுபலி’ படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும்’’ என கார்த்திகேயன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசா ரணை நேற்று நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ‘பாகுபலி-2’ படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார். ஆனால் அதையேற்க மறுத்த நீதிபதி படம் நாளை (இன்று) வெளியாக உள்ள நிலையில் தடை விதிக்க முடியாது என தெரிவித்து வழக்கு விசாரணையை இன்று தள்ளி வைத்தார்.