

எம்.ஜி.ஆரின் 97-வது பிறந்த நாளையொட்டி, கோத்தகிரி டானிங்டன் பாலம் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு, அதிமுக பொதுச்செயலாரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா, இன்று பகல் 12.30 மணிக்கு மாலை அணிவித்து, பிறந்தநாள் விழா சிறப்பு மலரையும் வெளியிட்டு பேசுகிறார்.
இதில், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
விழா மேடை சாலையில் அமைக்கப்பட்டுள்ளதால், உதகையிலிருந்து கோத்தகிரி செல்லும் சாலை வியாழக்கிழமை மாலை முதல் மூடப்பட்டது. வாகனங்கள் குன்னூர் வழியாக திருப்பிவிடப்பட்டன.
மேற்கு மண்டல ஐ.ஜி டேவிட்சன் தேவஆசிர்வாதம் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.