Published : 13 Nov 2014 09:09 AM
Last Updated : 13 Nov 2014 09:09 AM

பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு செல்ல ரயில்களில் முன்பதிவு நாளை தொடங்குகிறது: அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு தொடங்கியது

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கு கிறது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

கல்வி, வேலை விஷயமாக வெளியூர்களில் தங்கியிருப்ப வர்கள் தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய பண்டிகை நாட்களில் சொந்த ஊருக்கு செல்வர். அவர்களில் பெரும் பாலோர் ரயில் பயணத்தையே பெரிதும் விரும்புகின்றனர். ரயில் களுக்கான டிக்கெட் முன்பதிவு, 60 நாட்களுக்கு முன்பு தொடங் கும். அதன்படி, பொங்கல் பண்டி கைக்கு முந்தைய நாட்களுக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது.

அடுத்த ஆண்டு ஜனவரி 14-ம் தேதி போகிப்பண்டிகை, 15-ல் பொங்கல், 16-ல் மாட்டுப் பொங்கல், 17-ல் காணும் பொங்கல் வருகிறது. தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால், பெரும்பாலான மக்கள் 12, 13 அல்லது 14-ம் தேதி மாலையில் புறப்பட்டு சொந்த ஊருக்கு செல்ல திட்டிமிட்டிருப்பார்கள். அந்த தேதிகளில் இயக்கப்படும் ரயில்களுக்கான முன்பதிவு நாளை (14-ம் தேதி) தொடங்குகிறது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகை யில், ‘‘பொங்கல் நேர ரயில் களுக்கான டிக்கெட் முன்பதிவு 14-ம் தேதி தொடங்குகிறது. ஜனவரி 12-ம் தேதி பயணம் செய்ய விரும்புவோர் நாளை முன்பதிவு செய்துகொள்ளலாம். அடுத்த 2 நாட்களும் பொங்கல் ரயில்களுக்கான முன்பதிவு நீடிக்கும். மேலும் பண்டிகை நேரத்தில் சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்படும்’’ என்றார்.

விரைவு பஸ்களில் முன்பதிவு

அதே நேரத்தில் அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு ஏற்கெனவே தொடங்கிவிட்டது. இது தொடர்பாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘300 கி.மீ.க்கு மேல் செல்லும் அரசு விரைவு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. 90 நாட்களுக்கு முன்பே டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ள முடியும். எனவே, பொங் கலுக்கு ஊருக்கு செல்வோர் வழக்கமாக இயக்கப்படும் விரைவு பஸ்களில் முன்பதிவு செய்து வருகின்றனர். ரயில்களில் இடம் கிடைக்காதவர்கள், பஸ்ஸில் முன் பதிவு செய்ய வருவார்கள். அடுத்த மாதம் இறுதி முதல் அதிக மானோர் டிக்கெட்களை முன்பதிவு செய்வார்கள். அதன்பின்னர், சிறப்பு பஸ்கள் அறிவிக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x