தொழிலாளர் தின கொண்டாட்டம்: மே தின பூங்காவில் ஸ்டாலின் மரியாதை

தொழிலாளர் தின கொண்டாட்டம்: மே தின பூங்காவில் ஸ்டாலின் மரியாதை
Updated on
1 min read

தொழிலாளர் தினத்தையொட்டி சென்னையில் உள்ள மே தின பூங்காவில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

திமுக தொழிற்சங்கமான தொமுச பேரவை சார்பில் மே தின விழா, சென்னை சிந்தாதிரிப் பேட்டை மே தின பூங்காவில் நேற்று நடைபெற்றது. இதில் ஸ்டா லின் கலந்துகொண்டு, அங்குள்ள மே தின நினைவுத் தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் தொமுச பொதுச்செயலாளர் மு.சண்முகம், தொமுச (மின் வாரியம்) பொதுச் செயலாளர் ரத்தினசபாபதி,முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, எம்எல்ஏக் கள் மா.சுப்பிரமணியம், பி.கே.சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம், ஜெ.அன்பழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் தொழிலாளர்கள் மத்தியில் ஸ்டாலின் பேசியதாவது:

அண்ணா தலைமையில் திமுக முதன்முறையாக ஆட்சிக்கு வந்த போது, தொழிலாளர்கள் தினமான மே 1-ம் தேதியை அரசு விடுமுறை யாக அறிவித்து சட்டம் இயற்றப்பட் டது. கருணாநிதி முதல்வரான பிறகு, ஊதியத்துடன் கூடிய அரசு விடுமுறையாக மே 1-ம் தேதியை அறிவித்தார். அத்துடன் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, அவரது கவனத்துக்கு கொண்டுசென்று நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களில் மே தினத்தை அரசு விடுமுறையாக அறிவிக்கச் செய்தார்.

கருணாநிதி முதல்வராக இருந்த போதுதான் தொழிலாளர்களின் உரிமைகளை நினைவுபடுத்தும் வகையில் நேப்பியர் பூங்காவை மே தினப் பூங்காவாக உருவாக்கி, அங்கு நினைவுத் தூணும் அமைத்துத் தந்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் நிருபர்களிடம் ஸ்டா லின் கூறும்போது, ‘‘முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், அமைச்சர் விஜயபாஸ்கர், அன்புநாதன், சைதை துரைசாமி உள்ளிட்டோர் தொடர்பான இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடத்தியது. அதன் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. அதனால், அதிமுக பின்னணியில் பாஜக இல்லை என்பதை ஏற்க முடியாது’’ என்றார்.

கருணாநிதி உடல்நிலை

கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் நிருபர்களி டம் கேட்டபோது, ‘‘கருணாநிதியின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வரு கின்றனர். அவரது உடல் சீரான நிலையில் உள்ளது. மருத்துவர் களிடம் இருந்து அனுமதி கிடைத் தால், அவரது பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி அனை வரையும் சந்திப்பார்’’ என பதிலளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in