பொது இடங்களில் புகை பிடித்ததாக தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிப்பு

பொது இடங்களில் புகை பிடித்ததாக தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிப்பு
Updated on
2 min read

பொது இடங்களில் புகை பிடித்த தாக தமிழகம் முழுவதும் 5 ஆயி ரத்து 200 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த டி.சி.சரத் என்பவர், பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் ஒரு பொது நல மனு தாக்கல் செய்தார். அதன்பேரில், ‘பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் மீது பொது சுகாதாரத்துறை, காவல்துறை, உள் ளாட்சி அமைப்புகள் ஆகியவை சிறப்புக் குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இவற்றை விற்பனை செய்யக் கூடாது. பள்ளி, கல்லூரி, மருத்துவமனை அருகே புகையிலைப் பொருட்களை விற்கக் கூடாது’ என்று நீதிபதி உத்தர விட்டார்.

அதைத் தொடர்ந்து காவல் துறை, சுகாதாரத் துறை, மாநக ராட்சி அல்லது நகராட்சி ஆகியவை இணைந்த சிறப்புக் குழு அமைக் கப்பட்டது. இந்த சிறப்புக் குழு வினர் பொது இடங்களில் புகை பிடிப்போர், பள்ளி, கல்லூரி, மருத்துவமனை ஆகிய இடங் களில் சிகரெட், புகையிலைப் பொருள்களை விற்போர் மீது வழக்கு பதிவு செய்து வருகின்ற னர். கடந்த 3 நாட்களாக எடுக்கப் பட்ட நடவடிக்கையில் தமிழகம் முழுவதும் சுமார் 5 ஆயிரத்து 200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. இதில் சென்னையில் அதிகபட்சமாக 900 பேர் மீது வழக்கு பதிவு செய்துள் ளனர்.

பள்ளிக்கூடங்கள், மருத்துவ மனை உட்பட 8 இடங்களில் 300 மீட்டருக்குள் சிகரெட், பீடி, பாக்கு போன்ற போதைப் பொருட்கள் எதையுமே விற்பனை செய்யக் கூடாது என்று ஏற்கெனவே சட்டம் உள்ளது. இதைத் தொடர்ந்து பள்ளிகள் அருகே உள்ள கடைகளில் போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் சிகரெட் விற்பனை செய்ததாக 1,900 கடைகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவின் கீழ் மட்டும் இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை. கடைகளில் நடத்தப்படும் சோத னையின்போது தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்த கடைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பொது இடங்களில் புகை பிடித்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வருகிற 20-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு போலீஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். எனவே வருகிற 20-ம் தேதி வரை பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் மீது தீவிர நடவடிக்கை இருக்கும் என்று கூறப்படுகிறது.

திடீரென பொது இடங்களில் புகை பிடித்தவர்களை போலீஸார் துரத்திச் சென்று பிடித்தது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிலர் போலீஸாருடன் வாக்குவாதம் செய்தனர். புகை பிடித்து போலீஸிடம் சிக்கியவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. வாக்குவாதம் செய்தவர்களுக்கு ரூ.300 அபராதம் விதிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in