புதிய ரயில்பாதை அமைக்கும் பணிகளால் மூர்மார்க்கெட் ரயில் நிலைய வளாகம் மூடல்: கடற்கரை, பேசின்பிரிட்ஜில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்

புதிய ரயில்பாதை அமைக்கும் பணிகளால் மூர்மார்க்கெட் ரயில் நிலைய வளாகம் மூடல்: கடற்கரை, பேசின்பிரிட்ஜில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்
Updated on
2 min read

சென்னை சென்ட்ரல் - பேசின்பிரிட்ஜ் இடையே 5, 6-வது புதிய ரயில் பாதை களை அமைக்கும் பணி இறுதிக் கட்டத்தை அடைந்தது. இதன் காரணமாக மூர்மார்க்கெட் ரயில் நிலைய வளாகம் நேற்று மூடப்பட்டது. இதற்கு மாற்றாக சென்னை கடற்கரையில் இருந்தும், பேசின்பிரிட்ஜில் இருந்தும் சுமார் 150-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

சென்னை சென்ட்ரல் அருகே உள்ள மூர்மார்க்கெட் வளாகத்தில் இருந்து அரக்கோணம், கும்மிடிப் பூண்டி மார்க்கத்தில் தினந்தோறும் 260 மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் சுமார் 2 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். ரயில் சேவையை மேம்படுத்தும் வகையில் சென்னை பேசின்பிரிட்ஜ் இடையே 5, 6-வது புதிய ரயில் பாதைகளை அமைக்கும் பணிகள் ரூ.30.53 கோடியில் நடைபெற்று வருகின்றன. இதனால் இந்த மார்க்கத்தில் ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் அக்டோபர் 7-ம் தேதி வரையில் ரயில்களின் சேவையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மின்சார ரயில்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்ட்ரல் புறநகர் மின்சார ரயில் நிலையம் (மூர்மார்க்கெட் வளாகம்) நேற்று மூடப்பட்டு மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதற்கு மாற்றாக சென்னை கடற்கரையில் இருந்து திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணிக்கும், பேரின்பிரிட்ஜில் இருந்து கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட் டைக்கும் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன.

ரயில்சேவை மாற்றம் குறித்து பயணிகள் அறிந்துகொள்ளும் வகையில் ரயில் நிலையங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. ஒலிபெருக்கி மூலமும் அறிவிக்கப்பட்டது. மேலும் சிறப்பு ரயில்களின் கால அட்டவணையும் பயணிகளுக்கு அளிக்கப்பட்டது.

இருப்பினும், பயண நேரம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது, மேலும், ரயில் நிலையங்களில் நடைமேம்பாலங் களில் ஏறி, இறங்கி பேருந்துகளை பிடிக்கவேண்டி இருந்ததால் பயணிகள் அவதிப்பட்டனர்.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை சென்ட்ரல் - பேசின்பிரிட்ஜ் இடையே 5, 6-வது ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. சிக்னல்கள் அமைப்பது, பாதைகளை ஒழுங்குபடுத்தல் உள்ளிட்ட பணிகள் இன்றும் (நேற்று) நாளையும் (இன்று) நடக்கிறது. தொடர்ந்து 52 மணி நேரம் இந்த பணிகள் நடக்கவுள்ளதால், மூர்மார்க்கெட் வளாகத்தில் இருந்து எந்த மின்சார ரயில்களும் இயக்கப்பட வில்லை.

இருப்பினும் மக்கள் பாதிக்காத வகையில் சென்னை கடற்கரையில் இருந்தும், பேசின்பிரிட்ஜில் இருந்தும் 150க்கும் மேற்பட்ட சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. பயணிகளின் வசதிக்காக சென்னை சென்ட்ரல், சென்னை மூர்மார்க்கெட் வளாகம், சென்னை கடற்கரை, பெரம்பூர் ஆகிய 4 இடங்களில் உதவி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதுதவிர, 138 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தகவல்களை பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in