தமிழகத்தில் 30% சாவடிகளில் கேமரா மூலம் கண்காணிப்பு- பிரவீண்குமார் பேட்டி

தமிழகத்தில் 30% சாவடிகளில் கேமரா மூலம் கண்காணிப்பு- பிரவீண்குமார் பேட்டி
Updated on
1 min read

நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவின்போது தமிழகத்தில் 30 சதவீத வாக்குச் சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கான தேர்தல் பயிற்சிக் கூட்டம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணை யர்களும் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்துக்குத் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தலைமை வகித்தார். நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்தும், ஒருகட்டத் தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் அது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்துக்குப் பிறகு நிருபர் களிடம், தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறியதாவது:

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான பல்வேறு அம் சங்கள் பற்றி ஆட்சியர் களுக்கு இக்கூட்டத்தில் எடுத்து ரைக்கப்பட்டது. நாடாளு மன்ற தேர்தலின்போது, தமிழகத்தில் உள்ள 30 சதவீத வாக்குச்சாவடிகளில் `வெப்-காஸ்டிங்’ (இணைய கேமரா) மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்படும்.

பொது இடங்களில் (கல்லறை கள், அரசுக் கட்டிடங்கள்) அரசி யல் தலைவர்களின் படங்கள், சின்னங் களை வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in