

வியாசர்பாடி மூர்த்திங்கர் தெருவில் வசிக்கும் 733 குடும்பங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிக் கொடுக்கப்பட உள்ளது.
வியாசர்பாடி மூர்த்திங்கர் தெருவில் கடந்த 60 ஆண்டுகளுக் கும் மேலாக 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மழைக்காலங்களில் இவர்கள் குடியிருக்கும் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துவிடுவது பல ஆண்டுகளாக தொடர்கதையாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மழைக்காலங்களில் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இந்நிலையில் அவர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண அங்கு வசிக்கும் 733 குடும்பங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிக் கொடுக்கப்பட உள்ளது.
இது குறித்து அப்பகுதி அமைந் துள்ள மாநகராட்சியின் 46-வது வார்டு கவுன்சிலர் சரவணன் கூறும் போது, “மூர்த்திங்கர் தெருவில் குடியிருக்கும் மக்களுக்கு அதே பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிக் கொடுப்பது பற்றி அங்குள்ள பொதுமக்களிடம் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து, அவர்கள் விரைவில் அங்கிருந்து வெளியேறி விடுவார்கள்.
பின்னர் அடுக்குமாடி குடியி ருப்பு கட்டும் பணி 18 மாதங்க ளுக்குள் முடிக்கப்படும்” என்றார்.
இது குறித்து குடிசை மாற்று வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:
முதல் முறையாக இங்குள்ள மக்களுக்கு தலா ரூ.8 ஆயிரம் வழங்கப்படும். இதைத்தொடர்ந்து அவர்களும் வெளியேற சம்மதித் துள்ளனர். அவர்கள் தற்காலி கமாக தங்குவதற்கு முல்லை நகர் பகுதியில் இடம் தயாராக உள்ளது. அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்பட்டவுடன், இவர்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.