Published : 15 Jun 2017 10:14 AM
Last Updated : 15 Jun 2017 10:14 AM

செல்ல பிராணிகளால் மனிதர்களுக்கு பரவும் நோய்கள்: சுகாதாரமாக பராமரிக்காவிடில் மூளை, நுரையீரல் பாதிப்பு வரலாம்

செல்லப் பிராணிகளை வளர்ப்பது மனிதர்களின் பொழுதுபோக்காகவும், மனநலத்தை மேம்படுத்தும் உளவியல் ஆலோசனையாகவும் பார்க்கப்படுகிறது. இதில் நாய்கள் மனிதனுடைய மனம் கவர்ந்த செல்லப் பிராணி. மனிதன் முதலில் பழக்கப்படுத்திய விலங்கு நாய். அதனால், வீடுகளில் தொடங்கி, தோட் டங்கள் வரை நாய்களை செல்லப் பிராணியாகவும், காவலுக்கும் வளர்க்கின்றனர்.

ஆனால், நாய்களை வளர்க்கும் ஆர்வம் அவற்றை பராமரிப்பதில் இல்லை. அதனால், நாய்களிடம் இருந்து மனிதர்களுக்கு ரேபீஸ் முதல் மூளை, நுரையீரல் பாதிப்பு வரை ஏற்படுவதாக கால்நடை மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மதுரை கொண்டையம்பட்டி அரசு கால்நடை மருத்துவமனை மருத்துவரும், வளர்ப்பு நாய் சிறப்பு மருத்துவரான சி.மெரில் ராஜ் கூறியது: நாய்களுக்கு உணவு பராமரிப்பு முக்கியம். முதல் 3 மாதங்கள் வரை 4 வேளையும், 3 முதல் 6 மாதங்களை வரை 3 வேளையும், 6 மாதங்களுக்கு பிறகு 1 வயது வரை இரு வேளையும் திட, திரவ உணவு வழங்க வேண்டும். ஒரு வயதுக்கு மேல் ஒருமுறை சாப்பாடு வைக்க லாம். ஒரு நாளைக்கு ஒரு நாய்க்கு ஒரு கிலோ எடைக்கு 30 முதல் 50 மில்லி வீதம் தண்ணீர் வழங்க வேண்டும்.

தினமும் காலை, மாலை நாய்களுடன் உடற் பயிற்சி, விளையாட நேரம் ஒதுக்க வேண் டும். நாய்களை திறந்த வெளியில் விட்டால் அவை தோண்டுவதும், நம்மை விரட்டிப் பிடிப்பதுமாக இருக்கும். அதுவே அதற்கு நல்ல உடற்பயிற்சி. இந்த அடிப்படை பயிற்சிக்கு வாய் ப்பு ஏற்படுத்தினால் நாய்கள் சோர் வடையாது.

நாய்களை அடிக்கடி குளிப் பாட்டக் கூடாது. முடியின் வேர் களில் எண்ணெய் சுரப்பிகள் உள்ளதால் சோப்பு போட்டு குளிக்கும்போது அது நீங்கிவிட வாய்ப்புள்ளது. அதனால், மாதம் ஒரு முறை, 15 நாளுக்கு முறை முடிகளை நீக்கி குளிப்பாட்டலாம். சிறிய கட்டளைகளையிட்டு, நாய்களுடன் நட்பை பலப்படுத்த வேண்டும். கால்நடை மருத்துவரிடம் ஆண்டுக்கு ஒரு முறையாவது அழைத்துச் செல்ல வேண்டும். 42 நாளைக்குள் குட்டிகளுக்கு மஞ்சள் காமாலை, மூளைகாய்ச்சல் தடுப்பு ஊசி போட வேண்டும். நாட்டில்தெருநாய்கள் கடித்து ஆண்டுக்கு 30 ஆயிரம் பேர் இறக்கின்றனர்.

அதனால், நாய்க்கு ரேபீஸ் தடுப்பூசி 3 மாதம் தொடங்கியவுடன் போட வேண்டும். நாய்களின் மலம், சிறுநீரை மிதித்தாலோ, தொட்டாலோ மனிதர்களுக்கு உருளை புழுக்கள், தட்டைப்புழுக்கள், கொக்கி புழுக்கள் என குடற்புழுக்கள் பரவி கிருமி தொற்று ஏற்படும். இதில் எக்கினோ ஹாக்கஸ் எனப்படும் புழு தொற்று மனிதனை அதிகம் பாதிக்கும். இந்த பாதிப்பு ஈரல், நுரையீரல் உள்ளிட்ட அனைத்து உறுப்புகளிலும் வரலாம். மனிதனின் மூளை, நுரையீரல் செயல்பாடுகளை முடக்கும். குழந்தைகள், முதியவர்களுக்கு தோல் நோய், ஒவ்வாமை, படர் தாமரை ஏற்படலாம். ‘லெப்டோஸ் பைரோசிஸ்’ பாக்டீரியா உடலில் சென்று மஞ்சள் காமாலை, சிறுநீரக பாதிப்புகள் ஏற்படும் என்றார்.

‘சாக்லேட்’ - நாய்களுக்கு விஷம் போன்றது

- டாக்டர் சி.மெரில்ராஜ்

டாக்டர் சி.மெரில்ராஜ் மேலும் கூறியதாவது: ஊசி போடாத வரையில் வீட்டு நாயும், தெரு நாயாகத்தான் கருதப்படும். சாக்லேட் நாய்களுக்கு விஷம் போன்றது. சாக்லேட்டில் இருக்கும் ‘தீயோ புரோமின்’ என்ற வேதிப்பொருள் மனிதர்கள் சாப்பிடும்போது, அது கழிவாக வெளியேறிவிடும். ஆனால், நாயின் உடல் அமைப்பு அதனை வெளியேற்ற முடியாமல் உடலிலேயே தங்கி விடுகிறது. அதனால், வாந்தி, பேதி ஏற்பட்டு நாய் சாகும் வாய்ப்புள்ளது. 6 மாதங்களுக்கு மேல் ஆண், பெண் நாய்களுக்கு கருத்தடை செய்துவிட வேண்டும். ஆண் நாய்க்கு குடும்ப கட்டுப்பாடு செய்யாவிடில், சில நேரம் ஆக்ரோஷமாக மாறும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x