Published : 07 Mar 2017 08:17 AM
Last Updated : 07 Mar 2017 08:17 AM

பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்த முன்னாள் அமைச்சர்கள்: தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை

பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா மற்றும் அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அண்மையில் சசிகலாவை சந்திப்ப தற்கு சிறை நிர்வாகம் அனுமதி மறுத்த காரணத்தினால் அவர்கள் மூவரும் ஏமாற் றத்துடன் சென்னை திரும்பினர். இதைத் தொடர்ந்து சசிகலாவை சந்திப்பதற்காக மூவரும் முறைப்படி சிறை நிர்வாகத் திடம் அனுமதி கோரி மனு அளித்தனர். அதை பரிசீலித்த சிறை நிர்வாகம் சசிகலாவை சந்திப்பதற்கு அனுமதி வழங்கியதை அடுத்து, அவர்கள் நேற்று மாலை 3 மணி அளவில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைக்கு வந்தனர். அப்போது சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு தேவையான உணவுப் பொருட்கள், பழங்கள் ஆகியவற்றையும் உடன் எடுத்து வந்தனர்.

சிறையில் உள்ள பார்வையாளர்கள் அறைக்குச் சென்று சசிலாவை மூவரும் சந்தித்தனர். அப்போது வெள்ளை நிற சீருடையில் சோர்வாக நின்றிருந்த சசிக லாவைக் கண்டதும் கோகுல இந்திரா, வளர்மதி, சி.ஆர்.சரஸ்வதி மூவரும் கண் கலங்கினர். தொடர்ந்து மூவரும் சசிகலாவின் காலில் விழுந்து ஆசி பெற்று, உடல் நிலை குறித்து விசாரித்தனர். சுமார் 1 மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது. பின்னர் அவர்கள் மூவரும் செய்தியாளர்களைச் சந்திக்காமல் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x