தனியார் நிறுவன பாலில் கலப்படம்: சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி பொதுநல வழக்கு தாக்கல்

தனியார் நிறுவன பாலில் கலப்படம்: சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி பொதுநல வழக்கு தாக்கல்
Updated on
1 min read

தனியார் பால் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்வது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தனியார் பால் நிறுவனங்கள், தாங்கள் தயாரிக்கும் பால் கெட்டுப்போகாமல் இருக்க அதில் ஹைட்ரஜன் பெராக்சைட், குளோரின் போன்ற வேதிப் பொருட்களை கலப்பதாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சமீபத்தில் அதிரடியாக குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் உடல் ஆரோக்கியத் துக்காக உட்கொள்ளும் பாலில் தனியார் நிறுவனங்கள் கலப்படம் செய்வது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் ஏ.பி. சூரியபிரகாசம் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ‘‘தனியார் நிறுவனங்களின் பாலில் கலப்படம் இருந்தால் அதுகுறித்து நடவடிக்கை எடுக்க அதிகாரம் படைத்த அமைச்சரே இந்தக் குற்றச்சாட்டை வெளிப்படையாக கூறியுள்ளார். இந்த விஷயத்தில் அரசு அதிகாரிகள் கண்டும், காணாமலும் உள்ளனர். பெரும்பாலான தனியார் பால் நிறுவனங்கள் அண்டை மாநில ங்களில் உள்ளதால் அவற்றின் மீது தமிழக காவல்துறையினரால் நடவடிக்கை எடுக்க முடியாது. எனவே இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும் பாலில் கலப் படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் இந்திய தண்டனைச் சட்டத்தில் திருத்தம் செய்ய உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக நான் தமிழக டிஜிபி, சிபிஐ இயக்குநருக்கு கடந்த மே 29-ம் தேதி மனு அளித் தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. ஆகவே நான் அளித்த மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என அதில் கோரியுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

தமிழக டிஜிபி, சிபிஐ இயக்குநருக்கு கடந்த மே 29-ம் தேதி மனு அளித் தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே நான் அளித்த மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in