

பாலாறு தடுப்பணை விவகா ரத்தில் அனைத்துக் கட்சிகளுடன் பிரதமரை சந்திக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக மாநில இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாலாற்றில் ஆந்திர அரசு தடுப் பணை கட்டியதைக் கண்டித்து பாமக சார்பில் வேலூரில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கினார். பாமக தலைவர் ஜி.கே.மணி கண்டன உரை நிகழ்த் தினார்.
இதன் பிறகு அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டியதால், 4.5 லட்சம் ஏக்கர் விவசாய நிலமும் 80 லட்சம் மக்களின் குடிநீர்த் தேவையும் பாதிக்கும்.
1892-ம் ஆண்டு மைசூர் - மெட்ராஸ் ஒப்பந்தத்தையும் தமிழக - ஆந்திர மாநிலத்தின் உறவுகளையும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மதிக்கவில்லை. மத்திய வனத்துறை, சுற்றுச்சூழல் துறை, தமிழக அரசின் ஒப்புதல் எதையும் பெறாமல் தடுப்பணை கட்டுமானப் பணி நடக்கிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்ற வழக்கை துரிதப் படுத்த வேண்டும். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி பிரத மரை சந்திக்க வேண்டும்
தமிழகத்தில் தென்பெண்ணை - பாலாறு, நந்தன் கால்வாய் இணைப்பு, மேட்டூர் உபரி நீர் திட்டம், காவிரி - குண்டாறு, தாமிரபரணி - கருமேனியாறு, அத்திக்கடவு - அவினாசி என 20 நீர்பாசனத் திட்டங்கள் நிலுவையில் உள்ளன. இவற்றை நிறைவேற்ற 30 ஆயிரம் கோடி செலவாகும். இதை நிறைவேற்றினால் தமிழ்நாடு செழுமையாக மாறும்.
புல்லூர் தடுப்பணை குறித்து வழக்குதெ ாடர பாமக ஆலோசனை நடத்தி வருகிறது’’ என்றார்.