பொறியியல் படிப்பு 65,989 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை
பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் ஜுன் 27-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
20-ம் நாளான நேற்றைய கலந்தாய்வுக்கு 6,562 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 2,667 பேர் கலந்தாய்வுக்கு வரவில்லை. கலந்தாய்வில் கலந்து கொண்டு கல்லூரியை தேர்வு செய்த 3,867 பேர் ஒதுக்கீட்டு ஆணை பெற்றனர்.
கடந்த 20 நாட்களில் 65,989 பேருக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியை ஜெ.இந்துமதி தெரிவித்தார்.
கடந்த 20 நாளில் ஆப்சென்ட் ஆனவர்களின் எண்ணிக்கை நேற்றுதான் அதிகம் (40.6 சதவீதம்) என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று (திங்கள்கிழமை) நடக்கும் கலந்தாய்வுக்கு கட் ஆப் மதிப்பெண் 123.75 முதல் 116.75 வரை பெற்றுள்ள மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். பொது கலந்தாய்வு 21-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதைத்தொடர்ந்து தொழிற்கல்வி மாணவர்களுக்கான கலந்தாய்வு 23, 24-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
