Published : 21 Jul 2016 08:12 AM
Last Updated : 21 Jul 2016 08:12 AM

தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது:

வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைக் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுவிழந்துவிட்டது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு இல்லை. வெப்பச் சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஒருசில இடங்களில் பெய்யக்கூடும். குறைந்தபட்ச வெப்பநிலையாக 78.8 டிகிரி ஃபாரன்ஹீட், அதிகபட்ச வெப்ப நிலையாக 93.2 டிகிரி ஃபாரன்ஹீட் இருக்கக்கூடும்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 7.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x