Published : 09 Mar 2014 10:09 AM
Last Updated : 09 Mar 2014 10:09 AM

காங்கிரஸ் தனித்துப் போட்டி?- டெல்லியில் ஞானதேசிகன் முக்கிய ஆலோசனை

திமுக கூட்டணிக்கு இனி வாய்ப்பில்லை என்பதால் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தனித்துப் போட்டியிட திட்டமிட்டுள்ளது.



கடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும், காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட திமுக, இம்முறை 2 ஜி வழக்கு சிக்கலால் காங்கிரஸுடனான உறவைத் துண்டித்துக் கொண்டது.

இந்நிலையில், வரும் தேர்தலில் தமிழகத்தில் வேறு யாரும் கூட்டணி சேர முன்வராத நிலையில், காங்கிரஸ் தனித்து விடப்பட்டுள் ளது. எப்படியும் திமுக கூட்டணி அமைந்துவிடும் என காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர்.

ஆனால், ஸ்டாலினும் கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகளும் காங்கிரஸ் வருகையை விரும்பவில்லை. இருப்பினும், தேசியக் கட்சியின் தயவு டெல்லி அரசியலுக்கு வேண்டுமென விரும்பியதால் மீண்டும் காங்கிரஸ் கூட்டணி குறித்த பேச்சுக்களை தொடங்கியது திமுக.

கனிமொழி மூலமும் காங்கிரஸ் மேலிடத்திலிருந்து கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் நடந்தன. குறைவான எண்ணிக்கையில் சீட்களைக் கொடுத்து காங்கிரஸை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள லாம் என்றுகூட விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில், அதிமுக கூட்டணியிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியேறியது, திமுக கூட்டணியிலும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸுக்குப் பதில் கம்யூனிஸ்ட்களை சேர்க்க லாம் என திமுக தலைமை பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் தலைமை, ஞானதேசிகனை திடீரென டெல்லிக்கு அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறது. கூட்டணிப் பேச்சை காங்கிரஸ் தொடங்கினாலும் திமுக தரப்பில் இடதுசாரிகளை சேர்ப்பதிலேயே அதிக அக்கறை காட்டுவதால் காங்கிரஸ் நிர்வாகிகள் குழப்ப மடைந்துள்ளனர்.

கடந்த மூன்று நாட்களாக டெல்லி யிலிருக்கும், ஞானதேசிகனிடம், காங்கிரஸ் மேலிட நிர்வாகிகள், தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் காங்கிரஸ் வாக்கு வங்கி குறித்த பட்டியலை எடுத்து, அதன் அடிப்படையில் உள்ளூரில் பலம் வாய்ந்த காங்கிரஸாரை வேட்பாளர்களாக்கி, தனித்தே போட்டியிடலாம் என திட்டமிட்டு வருகின்றனர்.

கூட்டணியில் திமுக சேர்க்காத பட்சத்தில், அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்தமாகக் கருதி, தனித்துப் போட்டியிட காங்கிரஸ் நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x