

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய அதிகாரிக்கு நேற்று காலையில் ஒரு கடிதம் வந்தது.
அதில், ‘நெல்லை, முத்துநகர், நீலகிரி, மங்களூர் ஆகிய 4 எக்ஸ் பிரஸ் ரயில்களில் குண்டு வெடிக் கும். மேல்மருவத்தூர் அருகே வைத்து நெல்லை, முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில்களிலும், அரக் கோணத்தில் வைத்து நீலகிரி, மங் களூர் ரயில்களிலும் குண்டு வெடிக்கும்’ என கூறப்பட்டிருந்தது.
இந்த மிரட்டல் கடிதம், மாவோயிஸ்டுகள் பெயரில் எழு தப்பட்டிருந்ததால் கூடுதல் பர பரப்பு ஏற்பட்டது. மேலும், 9 செல் போன் எண்களும் கடிதத்தில் எழு தப்பட்டு இருந்தன. செல்போன் எண்களை வைத்து நடத்திய விசா ரணையில் அவை அனைத்தும் ரயில்வே அதிகாரிகளின் எண்கள் என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அரக் கோணத்தைச் சேர்ந்த கங்காதரன் என்பவர் மிரட்டல் கடிதம் அனுப் பியது தெரிந்தது. அவர் முன்னாள் ரயில்வே ஊழியர். தனக்கு வேண் டாதவர்களை சிக்க வைப்பதற்காக அவர் இப்படி செய்திருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கங்காதரனை போலீஸார் கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.