Published : 22 Apr 2017 08:00 AM
Last Updated : 22 Apr 2017 08:00 AM

சென்னை பெரியார் திடலில் 5-வது ஆண்டு சிறப்பு புத்தக கண்காட்சி தொடக்கம்

சென்னை புத்தகச் சங்கமம் சார்பில் 5-ம் ஆண்டு சிறப்பு புத்தகக் கண்காட்சி சென்னை பெரியார் திடலில் நேற்று தொடங்கியது. இங்கு 50 சதவீத தள்ளுபடி விலை யில் புத்தகங்களை வாங்கலாம்.

ஐஎன்எஸ் அடையாறு தலைமை அதிகாரி கேப்டன் சுரேஷ் கண்காட்சியை தொடங்கி வைத்தார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப் பாளர் சங்க தலைவர் காந்தி கண்ணதாசன் புத்தக விற்ப னையை தொடங்கி வைத்தார். பெரியார் மணியம்மை பல் கலைக்கழக துணைவேந்தர் ராமசந்திரன் முதல் புத்தகத்தை வாங்கினார்.

உலக புத்தக தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் இந்த புத்தகக் கண்காட்சி ஏப்ரல் 25-ம் தேதி வரை நடைபெறும். மொத்தம் 49 அரங்குகளில் பல்வேறு பதிப்பகங்களின் தமிழ், ஆங்கில புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அனைத்து புத்தகங்களும் 50 சதவீத தள்ளுபடி விலையில் கிடைக்கும். தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை பார்வையிடலாம். அனுமதி கட்டணம் கிடையாது.

புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்ட கடற்படை அதிகாரி சுரேஷ் நிருபர்களிடம் கூறும்போது, “மாணவர்கள், இளைஞர்கள் பாடப் புத்தகங்களுடன் அறிவு வளர்ச்சிக்கு உதவும் புத்தகங்களை அதிகம் படிக்க வேண்டும். இந்த சிறப்பு புத்தகக் கண்காட்சியில் அனைத்து புத்தகங்களும் 50 சதவீத தள்ளுபடி விலையில் விற்கப்படுகின்றன. இது மாணவர் களின் வாசிப்பு ஆர்வத்தை ஊக்குவிப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த வாய்ப்பை மாண வர்கள் தவறவிடக் கூடாது” என்றார்.

தி.க. தலைவர் கி.வீரமணி பேசும்போது, “பெரியார் தான் உரை நிகழ்த்தச் செல்லும் இடங்களில் எல்லாம் புத்தகங் களை அறிமுகம் செய்வார். புத்தக வாசிப்பு குறித்த அவசியத்தை மக்களிடம் விளக்கிப் பேசுவார். புத்தகங்களை தள்ளுபடி விலையில் விற்பனை செய்வார். அதுபோன்று வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்துவதற்காக இந்த புத்தகக் கண்காட்சியில் 50 சதவீத தள்ளுபடி விலையில் புத்தகங்கள் விற்கப்படுகின்றன” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x