Published : 31 Mar 2017 11:09 AM
Last Updated : 31 Mar 2017 11:09 AM

மாமல்லபுரம் அருகே பட்டிபுலத்தில் உள்ள சுனாமி தடுப்பு காடுகளில் மரங்களை வெட்ட முயற்சி: அறநிலையத்துறை மீது வனத்துறையினர் புகார்

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்ல புரத்தை அடுத்த பட்டிபுலம் மற்றும் கிருஷ்ணங்காரணை பகுதியில், கிழக்கு கடற்கரை சாலையையொட்டி, ஆளவந்தார் அறக்கட்ட ளைக்கு சொந்தமாக உள்ள 612 ஏக்கர் நிலம் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலத்தில் 2004 சுனாமி பாதிப்புக்கு பிறகு, சுனாமி தடுப்புக் காடுகள் ஏற்படுத்தும் திட்டத்தில், சமூக வனத்துறை ஆயிரக்கணக்கான சவுக்கு மரங்களை நட்டு பராமரித்து வருகிறது.

தற்போது அங்கு மரங்கள் நன்கு வளர்ந்து, கடற்கரையில் ஏற்படும் பேரிடர்களுக்கு இயற்கையான தடுப்புகளாக அமைந்துள்ளன. இதில், வனவிலங்குகளான நரி, மான் மற்றும் மயில் போன்றவை தஞ்சமடைந்து வருவதால் வனப் பகுதியாக மாறி வருகிறது.

இந்நிலையில், சுனாமி தடுப்பு காட்டில் உள்ள மரங்களை, டன் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் என்ற ஒப்பந்த அடிப்படையில், 25 ஆயிரம் மெட்ரிக் டன் மரங்களை வெட்ட தமிழ்நாடு அரசு காகித நிறுவனத்துக்கு, அறநிலையத் துறை அனுமதியளித்துள்ளது. இதன்பேரில், அந்நிறுவனம் கடந்த மாதம் பணிகளை தொடங்கிய போது, சமூக வனத்துறையினர் இயற்கை பேரிடர் கால தடுப்பு களுக்காக வளர்க்கப்படும் மரங் களை வெட்டக்கூடாது என பணி களை தடுத்து நிறுத்தியது.

இந்நிலையில், ‘சுனாமி தடுப்பு காடுகளை வனத்துறை முறையாக பராமரிக்காததால் தீ விபத்து மற்றும் சமூகவிரோத செயல்கள் நடைபெறுவதாக கூறி மரங்களை வெட்ட அறநிலையத்துறை முயற் சிப்பதாகவும். மரங்கள் வெட்டப் பட்டால் வனவிலங்குகள் பாதிக்கப் படுவதோடு இயற்கை பேரிடர் தடுப்பு காடுகள் அழியும்’ என்றும் வனத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, செங்கல்பட்டு சமூக வனக்கோட்ட அலுவலர் உமாதேவி கூறியதாவது: 12 ஆண்டு களாக பராமரிக்கப்பட்டு வரும் சுனாமி தடுப்பு காடுகள் பாது காப்பாக உள்ளதால்தான் வன விலங்குகள் தஞ்சமடைந்து வரு கின்றன. ஆனால், வருவாய் நோக் கத்துக்காக, பராமரிப்பு இல்லை என கூறி அறநிலையத்துறை மரங்களை வெட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. சுனாமி தடுப்பு காடுகளை அழித்தால் இயற்கை பேரிடர் காலத்தில் கடற்கரை கிராமங்கள் பெரியளவில் பாதிக்கப் படும் என்று அவர் கூறினார்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணியிடம் கேட்ட போது, ‘பராமரிப்பு இல்லாததால் மரங்களை வெட்ட ஆளவந்தார் அறக்கட்டளை நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. வருவாய் நோக்கத்துக்காக மரங் களை வெட்டினாலும், மீண்டும் அதேப்பகுதியில் அதிகளவிலான மரக்கன்றுகள் நட்டு வளர்க்கலாம். எனினும், இதுதொடர்பாக ஆள வந்தார் அறக்கட்டளையின் செயல் அலுவலரிடம் விசாரிக்கப்படும்’ என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x