

டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் நேற்று வெளி யிட்ட செய்திக்குறிப்பு:
கடந்த 2015-16-ம் ஆண்டுக் கான குரூப்-4-ல் அடங்கிய சுருக் கெழுத்து, தட்டச்சர் (கிரேடு-3) பதவிக்கு தகுதியான விண்ணப்ப தாரர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு கடந்த 6.11.2016 அன்று எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.
இந்த பதவிக்கான விண்ணப்ப தாரர்களின் இணையதள வழியிலான விண்ணப்பங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங் களைச் சரிபார்க்கும் பொருட் டும், அந்த விவரங்களின் உண் மைத்தன்மையை அறியும் பொருட்டும் சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் 17 முதல் 24-ம் தேதி வரை சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அந்த சான்றிதழ் சரி பார்ப்புக்கான அழைப்புக் கடிதம் விண்ணப்பதாரர்களுக்கு விரைவு அஞ்சல் வாயிலாக அனுப்பப்பட் டுள்ளது.
மேலும், சான்றிதழ் சரிபார்ப்பு அட்டவணை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. அழைப்புக் கடிதத்தை இந்த இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ள லாம். இதுகுறித்து இ-மெயில் மற்றும் எஸ்எம்எஸ் மூலமாகவும் விண்ணப்பதாரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டதாலேயே அவர் கள் பதவிக்கு தேர்ச்சி பெற்று விட்டதாக கருத இயலாது. மேலும், குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் சான்றிதழ் சரிபார்ப் புக்கு கலந்துகொள்ளத் தவறும் விண்ணப்பதாரர்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.