Published : 17 Jun 2017 09:08 AM
Last Updated : 17 Jun 2017 09:08 AM

இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை: பேரவையில் அமைச்சர் டி.ஜெயக்குமார் தகவல்

இலங்கை கடற்படையால் கைப் பற்றப்பட்ட தமிழக மீனவர் களின் படகுகளை மீட்க நட வடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித் துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் கே.பி.பி.சாமி (திமுக), ஜே.ஜி.பிரின்ஸ் (காங்கிரஸ்) ஆகியோர் கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதிலளித்து அமைச்சர் பேசியதாவது:

தமிழக மீனவர்களின் நலன் களைப் பாதுகாப்பதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உறுதி யாக இருந்தார். அதிமுக ஆட்சி யில் கடந்த 6 ஆண்டுகளில் தமிழக மீனவர்கள் மீது ஒரேயொரு துப் பாக்கிச் சூடு சம்பவம் மட்டுமே நடந்துள்ளது. ஆனால் திமுக ஆட்சியில் அதிக அளவில் துப்பாக் கிச் சூடுகள் நடந்து தமிழக மீனவர் கள் கொல்லப்பட்ட வரலாற்றை யாராலும் மறுக்க முடியாது.

இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர் களின் படகுகளை மீட்கவும், சிறை யில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கவும் மத்திய அரசு மூலம் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகள் கண்டிப்பாக மீட்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என துரை சந்திரசேகர் (திமுக), கே.ஆர்.ராமசாமி (காங்கிரஸ்) ஆகியோர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

அதற்கு பதிலளித்த வரு வாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ‘‘வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளைப் பாதுகாக்க தமிழக அரசு பல் வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பயிர்க் காப்பீடு மூலம் இழப்பீட்டுத் தொகை, வறட்சி நிவாரணம், விவசாய பம்ப்செட்களுக்கு மும்முனை மின்சாரம் என பலவேறு திட்டங் கள் அறிவிக்கப்பட்டுள்ளன’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x