Published : 29 Jun 2016 09:31 AM
Last Updated : 29 Jun 2016 09:31 AM

தீனதயாள் வீட்டில் கைப்பற்றப்பட்ட சிலைகள் மறு ஆய்வு: மத்திய தொல்லியல் துறை வருகை

தீனதயாள் வீட்டில் கைப்பற்றப்பட்ட சிலைகளை மறு ஆய்வு செய்ய மத்திய தொல்லியல் துறையினர் சென்னை வந்துள்ளனர்.

சென்னை ஆழ்வார்பேட்டை முரேஸ்கேட் சாலையில் பங்களா வீட்டில் வசிப்பவர் தீனதயாள். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் இவரது வீடு மற்றும் குடோனில் சோதனை நடத்தி 49 ஐம்பொன் சிலைகள், 236 கற்சிலைகள் மற்றும் 96 ஓவியங்களை பறிமுதல் செய்தனர். இவை அனைத்தும் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை யானவை. இந்த சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக அவர் பதுக்கி வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.

இந்த வழக்கு தொடர்பாக தீன தயாள், அவரது வீட்டில் வேலை செய்த மான்சிங்(58), குமார்(58), ராஜாமணி(60) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தீனதயாளின் கூட்டாளியான மகாபலிபுரத்தை சேர்ந்த லட்சுமி நரசிம்மன் என்பவ ரும் கைது செய்யப்பட்டார். அவரி டம் 9 ஐம்பொன் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தீனதயாள் வீட்டில் கைப்பற்றப் பட்ட சிலைகளை பெங்களூருவில் இருந்து வந்த மத்திய தொல்லி யல் துறையினர் ஆய்வு செய்தனர். அவர்கள் ஆய்வை முடித்து சென்ற பிறகு தீனதயாளிடம் இருந்து மீண்டும் சிலைகள் கைப்பற்றப்பட்டன. அந்த சிலைகளை சோதனை செய்வதற்கும், ஏற்கனவே சோதனை செய்த சிலை களை மறு ஆய்வு செய்யவும் மத்திய தொல்லியல் துறையினர் மீண்டும் சென்னை வந்துள்ளனர். பெங்களூருவில் உள்ள மத்திய தொல்லியல் துறையின் தென் மண்டல இயக்குநர் சத்தியபாமா தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் நேற்று சென்னை வந்த னர். அவர்கள் சிலைகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x