

உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் தைரியம் அரசுக்கு இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தர சன் விமர்சித்துள்ளார்.
திருப்பூரில் நேற்று செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது: உள் ளாட்சித் தேர்தலை தமிழக அரசு நடத்தாது. அதற்கான தைரியம் அவர்களுக்கு கிடையாது. நடத்தி னாலும் வெற்றி பெற முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். ஆகவே, ஏதேனும் காரணங் களைக் கூறி, தேர்தலை ஒத்திவைப்ப தற்கான பணிகளைச் செய்து வருகி றார்கள். தமிழக அரசு ஒத்துழைத் தால்தான், தேர்தல் ஆணையத்தால் உள்ளாட்சித் தேர்தலை நடத்த இயலும். எடப்பாடி பழனிசாமி யின் 100 நாள் ஆட்சி, எஞ்சி யுள்ள நாட்களை எப்படி தக்கவைத் துக்கொள்ள வேண்டும் என்பதில் தான் கவனமாக உள்ளது. நடப்பது எடப்பாடி பழனிசாமி ஆட்சியா அல் லது ஆளுநர் ஆட்சியா என்பது தெரியாத நிலையில்தான் உள்ளது.
காவிரி விவகாரம்
நீட் தேர்வு, காவிரி விவகாரம், மாட்டிறைச்சி விவகாரம் உட்பட மக்கள் உரிமைகள் சார்ந்த எந்தவித பிரச்சினைகளிலும் மத்திய அரசிடம் முறையிட தமிழக அரசு தயாராக இல்லை. மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்தியதில், மாநில அரசுக்கு ரூ.17 ஆயிரம் கோடி அளிக்கப்பட வேண்டும். அதனைக் கேட்டுப் பெற முடியாத நிலையில் தமிழகம் உள்ளது.
மாநில உரிமைகள் பறிப்பு
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மாநில உரிமைகள் பறிபோகிறது. காவிரி நதிநீர் விவகாரம் உட்பட மாநில உரிமைப் பிரச்சினைகளில் ஜெயலலிதா விட்டுக்கொடுத்தது இல்லை. ஆனால், இன்று மாநில உரிமைகளை மத்திய அரசு பறிக் கிறது. அதனை, மாநில அரசு வேடிக்கை பார்க்கிறது. அதிமுக வின் பலவீனத்தை மத்திய அரசு பயன்படுத்திக்கொள்ள நினைக் கிறது.
கடந்த காலங்களில் 8 முதல்வர் கள் இருந்தவரை, தலைமைச் செயலகத்துக்குள் யாரும் வர வில்லை. ஆனால், தற்போது சோதனை நடத்தப்படுகிறது. மத்திய அரசின் வருமான வரித் துறை எனும் சாட்டையைப் பயன்படுத்தி, சர்க்கஸ் கூடாரத்தில் மிருகங்களை அடிபணிய வைப்பதுபோல் அடிபணிய வைத்துள்ளனர்.
அதிமுக உடைந்ததற்கு மோடி தான் காரணம். இரு அணிகளும் சேர்வதையும், சேராமல் இருப்பதை யும் அவர்தான் தீர்மானிப்பார். பதவிகளைப் பெற விரும்பும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள பார்க்கிறார் மோடி.
இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்திருப்பது ஜனநாயக விரோதச் செயல். குடிநீர், வறட்சி உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண, அரசு முனைப்பு காட்ட வேண்டும்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில நிர்வாகக் குழு, சென்னை பாலன் இல்லத்தில் இன் றும், நாளையும் (ஜூன் 2, 3) நடை பெறுகிறது. கட்சியின் பொதுச் செய லாளர் சுதாகர் ரெட்டி, தேசியச் செயலாளர் து.ராஜா ஆகியோர் பங்கேற்கின்றனர். ஜூன் 3-ம் தேதி சென்னையில் கருணாநிதிக்கு நடை பெறும் வைர விழாவிலும் பங்கேற் கின்றனர். 7, 8 தேதிகளில் கோவை யில் மாநிலப் பொதுக் குழு நடைபெறுகிறது என்றார்.