திருப்பூரில் ரூ.570 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்: ஆவணங்களை சேகரிக்கும் சிபிஐ அதிகாரிகள்

திருப்பூரில் ரூ.570 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்: ஆவணங்களை சேகரிக்கும் சிபிஐ அதிகாரிகள்
Updated on
1 min read

திருப்பூரில் ரூ.570 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக, ஆவணங்களை சேகரிக்கும் பணியில் சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

சட்டப்பேரவைத் தேர்தலின் போது, கடந்த மே 14-ம் தேதி திருப்பூர் மாவட்டம் பெருமா நல்லூர் - குன்னத்தூர் சாலை யில் தேர்தல் நிலைக் கண் காணிப்புக் குழுவினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட் டிருந்த னர். அந்த வழியாக பாரத ஸ்டேட் வங்கி கோவை தலை மைக் கிளையின் பெட்டகத்தில் இருந்து, 3 கன்டெய்னர்களில் ஆந்திராவுக்கு ரூ.570 கோடி கொண்டு செல்லப்பட்டது.

உரிய ஆவணங்கள் இல்லை எனக் கூறி, தேர்தல் நிலைக் கண்காணிப்புக் குழுவினர், பணத்தை பறிமுதல் செய்தனர்.

திமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்பேரில், சிபிஐ வழக்கு பதிவு செய்து விசா ரித்து வருகிறது. இந்நிலையில், திருப்பூர் மற்றும் கோவையில் தற்போது சிபிஐ அதிகாரிகள் வழக்கு விசாரணைக்குத் தேவையான ஆவணங்களை சேகரிக்கும் முதல்கட்ட பணி யைத் தொடங்கி உள்ளனர். பணம் பறிமுதல் செய்தபோது நடத்தப்பட்ட விசாரணை விவ ரங்கள், கைப்பற்றப்பட்ட ஆவ ணங்களை சேகரித்துள்ளனர்.

மேலும், சென்னையில் இருந்து வந்திருந்த சிபிஐ அதிகாரி ஒருவர், திருப்பூர் மாவட்ட ஆட்சியரை நேற்று முன்தினம் சந்தித்தார். இது தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு தனிக் குழுவினரின் அறிக்கை விவரங்கள், நேற்று ஒப்படைக்கப்பட்டதாக வரு வாய்த் துறை அலுவலர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, “பணத்தை கைப்பற்றிய அரசு அலுவலர் கள், போலீஸார் மற்றும் இரு மாநில வங்கி ஊழியர் கள் என அனைத்துத் தரப்பின ரின் பட்டியலையும் சிபிஐ அதிகாரிகள் சேகரித்துள்ள னர். இவர்கள், அனைவருக் கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெறும். விசாரணை எப்போது தொடங் கும் என்பது தெரியாது” என்ற னர். வழக்கு விசாரணைக்காக ஓர் ஆய்வாளர் தலைமையி லான 2 போலீஸார், கோவை பாரத ஸ்டேட் வங்கி தலைமை அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அங்கு, ஜெஸ்ட் எனப்படும் பண இருப்பு அறை மேலாளர் மற்றும் 4 ஊழியர்களிடம் சம்பவத்தன்று எவ்வாறு பணம் ஏற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.

பணம் பிடிபட்டது முதல் திரும்ப வந்து அடுக்கி வைக்கப் பட்டது வரை நடந்தவை குறித்து எழுத்துப்பூர்வமாக எழுதி, மேலாளரின் கையொப்பத்தை அதில் பெற்றுக்கொண்டு கிளம் பிச் சென்றதாக, போலீஸ் மற் றும் வங்கி அதிகாரிகள் வட் டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in