

மேட்டூர் அரசு தொழிற் பயிற்சிக் கூடத்தில் உள்ள பண்டகசாலை மேற்கூரையை உடைத்து 70 மடிக்கணினிகள் திருடுபோயின.
மேட்டூரில் அரசு தொழிற் பயிற்சிக் கூடத்தில் பயிலும் 394 மாணவர்களுக்காக, அரசு வழங்கும் விலை யில்லா மடிக்கணினி வைக்கப்பட்டிருந்தது. 254 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டதுபோக எஞ்சிய மடிக்கணினிகள் பயிற்சி நிலையத்தில் உள்ள பண்டக சாலையில் வைக்கப்பட்டி ருந்தன. நேற்று முன் தினம் இரவு மர்ம கும்பல் பயிற்சி நிலைய மேற்கூரையை உடைத்து, உள்ளே சென்று மடிக்கணினிகளை திருடிச் சென்றுள்ளது. அங்கு வைக்கப்பட்டிருந்த 142 மடிக் கணினிகளில் 70 திருடு போயிருந்தது. இதனை அறிந்த பயிற்சி நிலைய முதல்வர் வேலுமணி, மேட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.