Published : 12 Jul 2016 08:02 AM
Last Updated : 12 Jul 2016 08:02 AM

தென்சென்னை மாவட்ட தேமுதிக செயலாளர் திமுகவில் இணைந்தார்

தென் சென்னை மாவட்ட தேமுதிக செயலாளர் வி.என்.ராஜன் நேற்று திமுகவில் இணைந்தார். திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, அவரது முன்னிலையில் திமுகவில் இணைந்தார். திமுக துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, முன்னாள் எம்எல்ஏ சி.எச்.சேகர் உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.

திமுகவில் இணைந்தது குறித்து வி.என்.ராஜன் கூறியதாவது:

விஜயகாந்த் திரைத்துறையில் நுழைந்த காலம் முதல் அவரு டன் இணைந்து பணியாற்றி வருகி றேன். அதற்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனித் துப் போட்டியிடுவேன் என்றார். ஆனால், வைகோ பேச்சை கேட்டுக் கொண்டு மக்கள் நலக் கூட்டணி யுடன் கூட்டணி வைத்தார். கட்சியி னர் சொல்வதைவிட குடும்பத்தினர் சொல்வதை கேட்டுதான் செயல்படு கிறார். அதனால்தான் தேமுதிக இந்த மோசமான நிலைக்கு தள்ளப் பட்டுள்ளது.

விஜயகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினரின் அணுகுமுறை யால் பலரும் தேமுதிகவில் இருந்து விலகி வருகின்றனர். இன் னும் ஏராளமானேர் விலக காத் திருக்கின்றனர். வரும் 17-ம் தேதி சேலத்தில் திமுக - மக்கள் தேமுதிக இணைப்பு விழா நடைபெறுகிறது. அதன்பிறகு ஆயிரக்கணக்கான தொண்டர்களை திரட்டி திமுகவில் இணைக்கும் விழாவை நடத்த திட்டமிட்டுள்ளேன். இனி தேமுதி கவுக்கு எந்த எதிர்காலமும் இல்லை. இவ்வாறு ராஜன் கூறினார்.

தொடரும் விலகல்

சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அக்கட்சியின் அப் போதைய எம்எல்ஏக்கள் வி.சி.சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்திபன், சி.எச்.சேகர் ஆகியோர் மக்கள் தேமுதிகவை தொடங்கினார். வட சென்னை மாவட்ட செயலாளர் யுவராஜ் உள்ளிட்டோர் திமுக வில் இணைந்தனர். தேர்தலில் தேமுதிக தோல்வி அடைந்தது டன் விஜயகாந்த் உள்ளிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனர்.

இதனால் மாநில நிர்வாகிகள், முன்னாள் எம்எல்ஏக்கள், மாவட்ட, ஒன்றிய செயலாளர்கள் என முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகி வருகின்றனர். இதுவரை 10-க்கும் அதிகமான மாவட்டச் செயலாளர்கள் திமுக, அதிமுக வில் இணைந்துள்ளனர். இந்நிலையில் தென்சென்னை மாவட்டச் செயலாளர் திமுக வில் இணைந் துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x