

இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 5 பேரையும் காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொள்ள வேண்டும் என்று எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இலங்கை நீதிமன்றத்தில் 5 தமிழக மீனவர்களுக்கு மரண தண் டனை விதிக்கப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அவர்கள் மீதான குற்றச் சாட்டு முற்றிலும் பொய்யானது. அவர்களுக்கும் போதை மருந்து கடத்தலுக்கும் எந்த சம்பந் தமும் இல்லை. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது தான் அவர்கள் கைது செய்யப்பட்டார் கள்.
5 மீனவர்களுக்கு விதிக்கப்பட் டுள்ள தூக்கு தண்டனை தமிழக கடலோர பகுதிகளில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அவர்கள் 5 பேரையும் உடனடியாக மீட்க இந்திய தூதரகமும், வெளியுறவுத்துறை அமைச்சகமும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.