அதிமுகவுக்கு புரட்சி பாரதம் கட்சி ஆதரவு: எம். ஜெகன்மூர்த்தி பேட்டி

அதிமுகவுக்கு புரட்சி பாரதம் கட்சி ஆதரவு: எம். ஜெகன்மூர்த்தி பேட்டி
Updated on
1 min read

புரட்சி பாரதம் கட்சி தலைவர் எம்.ஜெகன்மூர்த்தி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் திங்கள்கிழமை கூறியதாவது:

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு புரட்சி பாரதம் கட்சி ஆதரவு அளிக்கும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றால் முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வாய்ப்பு உள்ளது.

எனவே தமிழன் என்ற உணர்வுள்ள அனைவரும் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிக்காக புரட்சி பாரதம் தேர்தல் பணி செய்யும். குறிப்பாக, புரட்சி பாரதம் வலுவாக உள்ள வேலூர், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வடசென்னை, தென் சென்னை உள்ளிட்ட தொகுதிகளில் அதிமுகவுக்காக பிரச்சாரத்தில் ஈடுபடும்.

எங்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் வரும் 13-ம் தேதி பூந்தமல்லியில் நடக்க உள்ளது. அப்போது எங்கள் கட்சி சார்பில் அதிமுக வேட்பாளர் டாக்டர் வேணுகோபாலை அறிமுகப்படுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளோம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in