

சென்னை புரசைவாக்கம் நெடுஞ்சாலை கெல்லீஸ் பகுதியில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளி உள்ளது. குற்ற வழக்குகளில் பிடிபடும் 18 வயதுக்கு குறைவான சிறுவர், சிறுமிகள் இங்கு அடைத்து வைக் கப்பட்டுள்ளனர். தற்போது சுமார் 100 பேர் அடைத்து வைக்கப்பட் டுள்ளனர். காப்பகத்தின் பாதுகாப்பு குறை பாடு காரணங்களால் கடந்த வாரம் 33 சிறுவர்கள் இங்கிருந்து தப்பிச்சென்றனர். இதில் 32 பேர் பிடிபட்டனர்.
இந்த பரபரப்பு அடங்கு வதற்குள், இங்கு அடைக் கப்பட்டிருந்த 2 சிறுமிகள் நேற்று காலை தப்பிச் சென்றுவிட்டனர். அண்ணா நகரில் 150 பவுன் நகைகள் திருடப்பட்ட வழக்கில் பெண்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவர் சிறுமி. கெல்லீஸ் காப்பகத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்த சிறுமியும், மற்றொரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுமியும்தான் தப்பிச் சென்றுள் ளனர். காப்பக பணியாளர் விஜய குமார், மதியம் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டபோதுதான் 2 சிறு மிகள் தப்பிச் சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து அறிந்ததும் சமூக நலத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தப்பி யோடிய சிறுமிகளை தலைமைச் செயலக காலனி போலீஸார் தேடி வருகின்றனர்.