இபிஎப் ஓய்வூதியதாரர்கள் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை பிப்.28-க்குள் பதிவு செய்ய வேண்டும்: வருங்கால வைப்புநிதி ஆணையர் அறிவிப்பு

இபிஎப் ஓய்வூதியதாரர்கள் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை பிப்.28-க்குள் பதிவு செய்ய வேண்டும்: வருங்கால வைப்புநிதி ஆணையர் அறிவிப்பு
Updated on
1 min read

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி (இபிஎப்) ஓய்வூதியதாரர்கள் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை பிப்ரவரி 28-ம் தேதிக்குள் பதிவுசெய்ய வேண்டும் என்று சென்னை மண்டல இபிஎப் முதன்மை ஆணையர் சலீல் சங்கர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இபிஎப் ஓய்வூதியதாரர்கள் தொடர்ந்து ஓய்வூதியம் பெற்றிட ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு வசதியாக இபிஎப் உறுப்பினர்கள், ஓய்வூதியதாரர்கள் பிப்ரவரி 28-ம் தேதிக்குள் தங்கள் ஆதார் எண் மற்றும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை (டிஜிட்டல் ஜீவன் பிரமாண பத்திரம்) சமர்ப்பிக்க வேண்டும். மேலும், இதுவரை உயிர்வாழ்வு சான்றிதழை அதற்குரிய படிவத்தில் வங்கியில் சமர்ப்பித்த ஓய்வூதியதாரர்களும் இதேபோன்று டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இதுவரை டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்காத ஓய்வூதியதாரர்கள் இபிஎப் அலுவலகம் அல்லது பொது சேவை மையத்துக்கு சென்று ஆதார் அட்டையின் நகல், வங்கிக் கணக்கு அட்டை, பிபிஓ எண், பயன்படுத்தும் செல்போன் எண் ஆகியவற்றை பதிவுசெய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பிப்ரவரி 28-ம் தேதிக்குள் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை பதிவுசெய்யாத ஓய்வூதியதாரர்களுக்கு மார்ச் 1 முதல் ஓய்வூதியம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட மாட்டாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in