

மதுரை மாவட்டம், மேலூர் மலம்பட்டி யைச் சேர்ந்த கதிரேசன், இவரது மனைவி மீனாட்சி ஆகியோர் மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத் தில் தாக்கல் செய்த மனுவில், “எங்க ளின் மூத்த மகன் கலைச்செல்வன் திருப்பத்தூரில் 11-ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தபோது, சினிமாவில் நடிப்பதற்காக சென்னைக்கு சென்றார்.
பிரபல நடிகர் தனுஷ்தான் எங்கள் மகன் கலைச்செல்வன் ஆவார். சினிமாவில் சேர்ந்த பிறகு தனது பெயரை தனுஷ் கே.ராஜா என மாற் றிக்கொண்டார். அவர் எங்களுக்கு மாதந்தோறும் மருத்துவச் செலவு, வீட்டு வாடகை, உணவு செலவு என மொத்தம் ரூ.65 ஆயிரம் வழங்க உத்தரவிட வேண்டும்” என கூறப்பட் டிருந்தது. இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தனுஷ் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரினர். இதையடுத்து அடுத்த விசாரணையை மார்ச் 3-ம் தேதிக்கு நீதித்துறை நடுவர் செல்வகுமார் ஒத்திவைத்தார்.