

விழுப்புரம் அருகே முத்தாம் பாளையம் ஏரியில் சீமைக் கருவேல மரங்கள் அதிகமாக வளர்ந்து மாசு படுத்தி வருகின்றன. இதனை கரிகாலன் பசுமை மீட்பு படையினர், கீழ்ப்பெரும்பாக்கம் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்' அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் அப்பகுதி மாணவர்கள் இணைந்து அகற்றி வருகின்றனர்.
தமிழகத்தின் அனைத்து மாவட் டங்களிலும் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றி பிப்ரவரி 27-ம் தேதி அது தொடர்பான அறிக் கையை மாவட்ட ஆட்சியர்கள் சமர்ப் பிக்க வேண்டும். மாவட்ட நீதிபதி களும், வழக்குரைஞர் ஆணையர் களும் தொடர்ந்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண் டும். சீமைக் கருவேல மரங்களின் தீமைகள் குறித்து அந்தந்த ஆட்சியர்கள் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, விழுப்புரம் மாவட்டம் முழுவதும் இம்மரங் களை முழுமையாக அகற்றும் பணி தொடங்கியது. ஆனால், இத்தீர்ப் புக்கு முன்பே விழுப்புரத்தில் இயங்கும் கரிகாலன் பசுமை மீட்புப்படையினர் கோயில் குளங் களை சுத்தப்படுத்துதல், பொது இடங்களை சுத்தப்படுத்துதல், சீமைக் கருவேல மரங்களை அகற்றி வந்தனர். தற்போது உயர் நீதி மன்ற உத்தரவிற்குப் பிறகு ஜே.சி.பி. இயந்திரத்தை பயன்படுத்த ஆட்சி யர் உத்தரவு அளிக்கவேண்டும் என மனு அளித்து, ஆட்சியரின் உத்தரவு பெற்றனர். இதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் விழுப்புரம் அருகே முத்தாம்பாளை யம் கிராமத்தில் உள்ள ஏரியில் கருவேல மரத்தினை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வேர் பகுதியினை அகற்றுவதற்கு ஜே.சி.பி. இயந்திரம் பெரிதும் பயன்படுகிறது.
இப்பணியில் கீழ்ப்பெரும் பாக்கம் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்' அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் அப்பகுதி மாணவர்கள் இணைந்து செயல் பட்டு வருகின்றனர். இளைஞர்கள், மாணவர்கள் இணைந்து சீமைக் கருவேல மரங்களை ஏரிப்பகுதியில் அகற்றுவது அப்பகுதி மக்களிடையே பாராட்டுதலை பெற்றிருக்கிறது.