

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் சென்னையில் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினர். இதில், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், முனுசாமி, கே.பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அணி சார்பில் வேட்பாளராக மதுசூதனன் போட்டியிடுகிறார். கடந்த 2 நாட்களாக ஒபிஎஸ் ஆதரவாளர்கள் தங்களது நிர்வாகிகளை சந்தித்தும், பொதுமக்களிடமும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டும் வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் முன்னாள் அமைச்சர்கள் பொன் னையன், முனுசாமி, கே.பாண்டியராஜன், முன்னாள் எம்பி மனோஜ்பாண்டியன், ஆர்.கே. நகர் தொகுதி நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை நடத்தினர்.