30ஆம் தேதி முதல் அதிமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டங்கள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

30ஆம் தேதி முதல் அதிமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டங்கள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
Updated on
1 min read

அதிமுக அரசின் பட்ஜெட் விளக்க பொதுகூட்டங்கள் வரும் 30ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் நடத்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளதாவது:

மக்கள் நலப் பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவதில் நாட்டுக்கே முன்னோடியாகத் திகழும் இந்த அரசின் 2016-17ம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கை சட்டப்பேரவையில் கடந்த 21-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டு, பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களை பெற்றுள்ளது. இந்த புதிய பட்ஜெட் வழியாக தமிழகத்தில் நிறைவேற்றப்பட உள்ள திட்டங்களை மக்கள் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில், அதிமுக அரசின் 2016-17ம் ஆண்டுக்கான பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டங்கள் வரும் 30-ம் தேதி முதல் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை 3 நாட்கள் ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நடக்கும்.

கட்சியின் சட்டப்பேரவை உறுப் பினர்கள் ஆங்காங்கே நடக்கும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று சிறப்புரையாற்றுவார்கள். மாவட் டச் செயலாளர்கள், நிர்வாகிகள் தங்கள் மாவட்டத்தில் அறிவிக் கப்பட்டுள்ள பொதுக்கூட்டங் களை, மற்ற அணிகளின் நிர்வாகிகளுடன் இணைந்து சிறப்புப் பேச்சாளர்கள், கலை நிகழ்ச்சிகளுடன் நடத்த வேண்டும். இது தொடர்பான விவரங்களை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இந்த பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்களை பொதுக்கூட்டங் கள், துண்டுப் பிரசுரங்கள் வாயிலாக மட்டுமின்றி இணை யம், டிஜிட்டல்- மின்னணு சாதனங்கள் வாயிலாகவும் விரிவாக மக்களுக்கு எடுத்து ரைக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in