ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க நிதி: முதல்வருக்கு கி.வீரமணி வேண்டுகோள்

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க நிதி: முதல்வருக்கு கி.வீரமணி வேண்டுகோள்
Updated on
1 min read

அமெரிக்க ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழுக்கு இருக்கை அமைக்க தமிழக அரசு சார்பில் நிதி உதவி வழங்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதாவுக்கு திரா விடர் கழக தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அமெரிக்காவில் உள்ள பிரபல ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் செம்மொழியான நம் தமிழ் மொழிக்கு தனி இருக்கை ஏற் படுத்த அருமையான தருணம் தமிழக அரசுக்கும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இப்போது ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா வாழ் பிரபல மருத்துவர்கள் திருஞான சம்பந்தம், ஜானகிராமன் ஆகிய இருவரும் இதற்கென பெரு முயற்சி எடுத்துள்ளனர். இவர்கள் தங்களது வருவாயில் கணிசமான பெருந்தொகையை கொடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்தினரை, இத்திட்டத்தை ஏற்படுத்திட ஒப்புக் கொள்ளுமாறு செய்தனர். இதற்கான நிதி ஏற்பாடு செய்யப் பட்டால்தான் அவர்கள் எடுத்த முயற்சி பெற்றி பெறும்.

எனவே, தமிழக முதல்வர் இதுபற்றி சிந்தித்து, அமெரிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கு தமிழக அரசு சார்பில் நிதியை சட்டப் பேரவையிலேயே அறிவிக்கலாம். இதற்கு திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளும் வரவேற்பு அளிப்பார்கள். சட்டப்பேரவையில் மட்டுமல்லாமல், வெளியில் உள்ள மற்ற கட்சிகளும், சமூக அமைப்பு களும், தமிழ் ஆர்வலர்களும் இதனை வரவேற்பார்கள். இவ் வாறு அறிக்கையில் கி.வீரமணி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in