

'மாதி' புயல் தமிழகம், புதுச்சேரியை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறுகையில்: 'மாதி' புயல், சென்னைக்கு கிழக்கே 600 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.இதனால் அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்பதால் மீனவர்கள் ஆழ் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள், என தெரிவித்தார்.