குழந்தைகள் உரிமைகள் ஆணையத் தலைவராக கல்யாணி மதிவாணன் நியமனத்தை திரும்ப பெற தமிழக அரசு முடிவு: உயர் நீதிமன்றம் பாராட்டு

குழந்தைகள் உரிமைகள் ஆணையத் தலைவராக கல்யாணி மதிவாணன் நியமனத்தை திரும்ப பெற தமிழக அரசு முடிவு: உயர் நீதிமன்றம் பாராட்டு
Updated on
1 min read

குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவ ராக முன்னாள் துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் நியமிக் கப்பட்டதை திரும்பப் பெற முடிவு செய்திருப்பதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. இதற்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.

‘மாற்றம் இந்தியா’ அமைப்பின் இயக்குநர் பாடம் ஏ.நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:

தமிழகத்தில் குழந்தை கள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் முறைப்படுத்தப் படாமல் புதைகுழியில் தள்ளப் பட்டுள்ளது. குழந்தைகளின் நலன் காக்கும் வகையில் எந்த உரிமைகளும் நிலைநாட்டப் படவில்லை. புற்றீசல்போல பெருகியுள்ள குழந்தைகள் காப்பகங்கள் அப்பாவி குழந்தைகளை வைத்து, கோடி கோடியாக சம்பாதிக்கின்றன.

இந்த சூழலில், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தலைவராக மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கல்யாணி மதிவாணனை அவசர அவசரமாக நியமித்துள்ளனர். இதில் வழிகாட்டு விதிமுறை கள் முறையாக பின்பற்றப்பட வில்லை. அவர் மீது ஏற்கெனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே அந்த நியமனத்தை மறுபரிசீலனை செய்து, குழந்தைகள் நலனில் அக்கறை கொண்ட, குழந்தைகள் உரிமைகளில் திறமையான, அனுபவம் உள்ள நபரை ஆணையத் தலைவர் பதவிக்கு நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கோரியிருந்தார்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, ‘‘கல்யாணி மதிவாணன் நியமனத்தை மறுபரிசீலனை செய்யாவிட்டால் நீதிமன்றம் தலையிட நேரிடும்’’ என தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு எச்சரித்தது.

இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகி யோர் அடங்கிய அமர்வில் நடந் தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.முத்துக்குமார சுவாமி ஆஜராகி, ‘‘குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவராக கல் யாணி மதிவாணன் நியமிக்கப் பட்டதை திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக 7 நாட்களில் முறையான அறிவிப்பு வெளி யிடப்பட்டு, புதிதாக தலைவரை தேர்வு செய்ய விளம்பரம் வெளி யிட்டு, விண்ணப்பங்களை வர வேற்க உள்ளோம்’’ என்றார். மாவட்ட அளவில் குழந்தைகள் நல குழுக்கள், சிறார் நீதி வாரி யங்கள் அமைக்கவும் அரசு நட வடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழக அரசின் இந்த முடிவுக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை மார்ச் 10-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in