

அந்தமான் தீவைச் சேர்ந்த முகமது நிசார்(55) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவருடன் உஸ்மான் அலி(45), ஆனந்த் தீர்க்கி(48), பல்ராம்(23), கிருஷ்ணநாக்(24), ரவி ராம்(19) ஆகியோர் கடந்த நவம்பர் 27-ம் தேதி அந்தமான் ஜங்கிள் போர்ட் பகுதியில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். நடா புயலின்போது படகில் தண்ணீர் புகுந்து படகு பழுதாகியது.
சுமார் 35 நாட்களாக நடுக்கடலில் படகில் உண்ண உணவின்றி, மீன் மற்றும் கருவாடு போன்றவற்றை சாப்பிட்டுள்ளனர். ஜனவரி 3-ம் தேதி இலங்கை திரிகோணமலையில் கரை ஒதுங்கிய அவர்களைக் கண்ட இலங்கை கடற்படையினர், 6 மீனவர் களிடமும் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் புயல் காரண மாக திசை மாறி வந்தது தெரிய வந்தது.
நேற்று முன்தினம் (ஜன.9) இலங்கை கடற்படையினர் 6 மீனவர் களையும், அவர்களது படகையும் இந்திய கடலோரக் காவல் படையினரி டம் ஒப்படைத்தனர். அவர்களை இந் திய கடலோரக் காவல்படையினர் சிறிய ரக கப்பலில் காரைக்கால் மீன் பிடி துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர். காரைக்கால் மீன்வளத் துறை உதவி இயக்குநர் நடேச பிள்ளை, அந்தமான் மீன்வளத் துறை அதிகாரிகள் பசீர் அகமது, ஸ்ரீ அம்சா உள்ளிட்டோர் மீனவர்களை வரவேற்றனர். பின்னர் மீனவர்கள் அந்தமான் செல்ல மீன்வளத் துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.