

சென்னையில் இயங்கும் சிறிய பஸ்களில் இரட்டை இலைச்சின்னம் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கண்டனம் தெரிவித்து தமிழக முதல்வருக்கு திமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திமுக சார்பில் அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயளர் ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், போக்குவரத்து செயலாளர், தேர்தல் ஆணையர், உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த நோட்டீசில்: அரசு வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் நலத் திட்டங்களில், சட்ட விதிகளை மீறி, அதிமுக அரசு தனது கட்சி சின்னத்தை பதித்து பொது மக்களை ஏமாற்ற முயல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அத்தகைய சின்னங்களை உடனடியாக நீக்காவிட்டால் நீதிமன்றத்தை அணுக நேரிடும் என்றும் அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.