பத்திரிகை உலகின் பிதாமகன் ‘சாவி’: மலரும் நினைவுகளுடன் கருணாநிதி புகழாரம்

பத்திரிகை உலகின் பிதாமகன் ‘சாவி’: மலரும் நினைவுகளுடன் கருணாநிதி புகழாரம்
Updated on
1 min read

எழுத்தாளர் - பத்திரிகையாளர் சாவியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கருணாநிதி கூறியிருப்பதாவது:

எழுத்தாளர் சாவி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘தி இந்து’ (தமிழ்) நாளிதழில் நண்பர் மாலன், ‘ஆகஸ்ட் 10 - சாவி 100-வது பிறந்த நாள் - என்றும் இளமையுடன் இருந்தவர்’ என்ற தலைப்பில் எழுதியிருந்தார்.

மாலன் எழுதியதைப் படித்ததும் சாவியின் 85-வது பிறந்த நாளில் நான் கலந்து கொண்டது நினைவுக்கு வந்தது. அந்த விழாவில் அவரே என் கரங்களில் நினைவுக் கேடயத்தை வழங்கினார். எனக்கு பெரிய மல்லிகை மாலை அணிவித்து கட்டி தழுவிக் கொண்டார். எனக்கு அணிவிப்பதற்காக அவரே கடைக்குச் சென்று தனியாக கட்டச் சொல்லி வாங்கி வந்த மாலை என அவரே மேடையில் அறிவித் தார். சென்னை நாரத கான சபாவில் இந்தக் காட்சியை அவரது துணைவியார், குடும்பத் தினர், உறவினர்களும் ரசித்துக் கொண்டிருந்தனர். பேசிக் கொண் டிருக்கும்போதே, தன்னால் பேச இயலவில்லை. நெஞ்சு வலிக்கிறது எனக் கூறி மயங்கினார்.

அவர் மயங்கி விழும்போது நானும், எனது பாதுகாப்பு படையி னரும் அவரை பிடித்துக் கொண் டோம். தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் 9-2-2001-ல் சாவி இயற்கை எய்தினார். காந்திய டிகளுடன் நவகாளி யாத்திரைக்கு சென்று அவரை பேட்டி கண்டு எழுதியவர். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர். பத்திரிகை உலகின் பிதாமகனாகவே திகழ்ந்தவர். ‘வாஷிங்டனில் திருமணம்’ என்ற அவரது நகைச்சுவை நாடகம் தமிழகத்தில் ஒரு வரலாற்றினை உருவாக்கியது.

சாவி மறைந்தபோது நான் எழுதிய இரங்கல் செய்தியில், ‘‘எழுத்துலகில் பீடுநடை போட்ட வரும், எழுத்தாளர்கள் பலரை உருவாக்க காரணமானவருமான என் ஆருயிர் நண்பர் சாவி இயற்கை எய்திவிட்டார். அவருக் கும், எனக்குமான நட்பு ஆழமானது. அதை யாராலும் பிரிக்க முடியாது. வாழ்க சாவியின் புகழ்’’ என குறிப்பிட்டிருந்தேன்.

அப்படிப்பட்ட சாவியின் பெருமைகளை அவரது 100-வது பிறந்த நாளில் போற்றுவது எனது கடமை என கருதுகிறேன்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in