Published : 29 Aug 2016 08:53 AM
Last Updated : 29 Aug 2016 08:53 AM

பாரம்பரியம் கொண்ட தகவல்களை பாதுகாத்து வைக்க வேண்டும்: சுற்றுலாத் துறை ஆணையர் வலியுறுத்தல்

சென்னை தினத்தை முன்னிட்டு பாரம்பரிய கார்களின் அணி வகுப்பு நிகழ்ச்சி சென்னை பழைய மகாபலிபுரம் சாலை கொட்டிவாக்கத்தில் துர்யா ஹோட்டலில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியை தமிழ்நாடு சுற்றுலாத் துறை ஆணையர் ஹர் சஹாய் மீனா தொடங்கி வைத்தார். வரலாற்று ஆய்வா ளர் எஸ்.முத்தையா, சங்கீத வரலாற்று ஆய்வாளர் வி.ஸ்ரீராம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியின்போது சென்னையில் பயன்படுத்தப்பட்ட பாரம்பரியம் கொண்ட கார்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. மோரீஸ் மைனர், ஃபோர்ட், ஃபியாட், செவர்லே மாஸ்டர் உள்ளிட்ட நிறுவங்களைச் சேர்ந்த 20-க்கும் அதிகமான கார்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியின்போது சுற்றுலாத்துறை ஆணையர் ஹர் சஹாய் மீனா பேசியதாவது:

சென்னை தினம் கொண்டா டுவது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தியாவின் பாரம்பரியமான நகரமாக சென்னை உள்ளது. சென்னையின் இட்லி, சாம்பார் இன்றைக்கு இந்தியா முழுவதும் விரும்பி சாப்பிடப்படுகிறது. சென் னையின் அடையாளமான பரத நாட்டியத்துக்கு உலக அளவில் வரவேற்பு உள்ளது. சென்னையில் மியூசியம், நேப்பியர் பாலம், கன்னிமாரா நூலகம் என 50-க்கும் அதிகமான பாரம்பரியம் மிக்க இடங்கள் உள்ளன.

சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்திலேயே உலகின் பிரபலமான கார்கள் பல சென்னை நகரில் வலம் வந்துள்ளன. இந்தச் சூழலில், சென்னையின் பாரம்பரிய பெருமைகளை நாம் போற்றி பாதுகாக்க வேண்டும். இங்கிலாந்து போன்ற ஐரோப் பிய நாடுகளில் பழமையான விஷயங்களைப் போற்றுவதற் காக அவற்றை எழுத்தில் பாது காத்து வைக்கிறார்கள். அதைப் போலவே, நாமும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

பாரம்பரியமான சின்னங் களைப் பராமரிப்பது, பொதுமக் களிடையே அவற்றைக் கொண்டு சேர்க்கும் பணிகளில் தமிழ்நாடு சுற்றுலாத் துறையும் ஈடுபட்டு வருகிறது. இதன் காரணத்தால் கடந்த ஆண்டைவிட 20% அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பய ணிகள் தமிழகத்துக்கு வருகை தந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x