காவல் நிலைய வளாகத்தில் தூக்கிட்ட நிலையில் காவலர் சடலம்

காவல் நிலைய வளாகத்தில் தூக்கிட்ட நிலையில் காவலர் சடலம்
Updated on
1 min read

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் காவல் நிலைய வளாகத்தில் மரத்தில் தூக்கிட்ட நிலையில் காவலர் ஒருவர் சடலமாகத் தொங்கியதால், அந்த கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

வேதாரண்யத்தை அடுத்துள்ள புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த வர் ஆறுமுகம்(54). இவர் காவல் துறையில் 1984-ம் ஆண்டில் பணியில் சேர்ந்தார். கரியாப்பட் டினம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.

இவர், நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்துள்ளார். அப்போது ஊர்க்காவல் படையைச் சேர்ந்த காவலர் கதிரவன் என்பவருடன் நகரில் சில பகுதிகளில் ரோந்துப் பணிக்கு சென்றுவிட்டு மீண்டும் இரவு 11 மணியளவில் காவல் நிலையத்துக்கு திரும்பி விட்டாராம்.

இந்த நிலையில் காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவலர் முருகானந்தம் நேற்று அதிகாலை காவல் நிலைய கட்டிடத்தின் பின்புறம் சென்றுள் ளார். அப்போது அங்குள்ள ஒரு மரத்தில் கயிற்றில் தூக்குப் போட்ட நிலையில் ஆறுமுகம் சடலமாகத் தொங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த முருகானந்தம் உடனடியாக காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்ததும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிநவ் குமார், டி.எஸ்.பி. சார்லஸ் ஆகியோர் காவல் நிலையத்துக்கு வந்தனர். இதைத் தொடர்ந்து ஆறுமுகத்தின் சடலம் மரத்திலி ருந்து இறக்கி, பிரேத பரிசோ தனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆறுமுகம் இறந்த தகவல் அறிந்து வந்த அவரது மனைவி அன்னலட்சுமி மற்றும் அவரது உறவினர்கள் ஆறுமுகத்தின் சாவில் சந்தேகம் இருப்பதாக காவல் துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். மேலும், குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்காமல், சடலத்தை மருத்துவமனைக்கு அனுப்பி யதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வருவாய் கோட்டாட்சியர் சிவப்பிரியா, வட்டாட்சியர் சாந்தி மற்றும் காவல் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சடலத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். பிரேத பரிசோதனையை முழுவதுமாக வீடியோ எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

காவலர் ஆறுமுகம் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதில் தொடர்புடையவர்களை உடன டியாக கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி செம்போடை கடைவீதியில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in