Published : 26 Nov 2014 10:43 AM
Last Updated : 26 Nov 2014 10:43 AM
நகைச்சுவை நடிகர் விவேக்கின் தந்தை சிவ அங்கய்யா பாண்டியன் சென்னையில் நேற்று காலை காலமானார். அவருக்கு வயது 90.
ராமநாதபுரம் அருகில் உள்ள மண்டபம் என்ற ஊரில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், ஓய்வு நேரங்களில் அந்தப் பகுதியில் தங்கியிருந்த இலங்கை அகதிகளின் குழந்தைகளுக்கு தமிழ்ப்பாடம் எடுத்தார்.
கடந்த பல ஆண்டுகளாக நடிகர் விவேக்குடன் சென்னை சாலிக்கிராமம், மெஜஸ்டிக் காலனியில் வசித்து வந்தார். சிவ அங்கய்யா பாண்டியனின் உடல் இறுதிச் சடங்குக்காக அவரது சொந்த ஊரான கோவில்பட்டி - இலுப்பை ஊரணிக்கு நேற்று மாலை கொண்டு செல்லப்பட்டது.
இன்று இறுதி சடங்குகள் நடைபெறுகின்றன. இவருக்கு மணியம்மாள் என்கிற மனைவியும், இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் (நடிகர் விவேக்) உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT