

சென்னையில் மழை வெள்ளத் தால் உருவான குப்பையில் 2 லட்சம் டன் அளவுக்கு ஒரே மாதத்தில் அகற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:
சென்னையில் மழை வெள்ளத் தால் ஏற்பட்ட குப்பையை அகற்ற போர்க்கால அடிப்படையில் 33 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு, 24 மணி நேரமும் குப்பை அகற்றும் பணி நடைபெற்று வந்தது. கடந்த டிசம்பர் 7 முதல் 31-ம் தேதி வரை 2 லட்சத்து 7 ஆயிரத்து 835 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது.
நோய் கிருமிகளை அழிக்க 2 ஆயிரம் டன் பிளீச்சிங் பவுடர் கொள்முதல் செய்யப்பட்டு 1,164 டன் பயன்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா 500 கிராம் வீதம் வழங்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை காலத் தில் 11 ஆயிரத்து 397 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. அதில் 17 லட்சத்து 35 ஆயிரத்து 233 பேர் பயன்பெற்றுள்ளனர்.