Published : 20 Sep 2016 09:04 AM
Last Updated : 20 Sep 2016 09:04 AM

கோயில் சொத்துகளை அறிய தகவல் தொகுப்பு: பணியாளர் ஓய்வூதியம் ரூ.2 ஆயிரமாக உயர்வு - முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

கோயில் பணியாளர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித் துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழக கோயில்கள் மனித வாழ்வின் எல்லா செயல்பாடு களுக்குமான மையமாக தொன்று தொட்டு இருந்து வந்துள்ளன. சிற்பிகள், ஸ்தபதிகள், கட்டு மானப் பணியாளர்கள், மரத்தச் சர், உலோகச் சிற்பிகள், கைவினை ஞர்கள், கட்டிட வல்லுநர்கள், இசை வாணர்கள், நடனக் கலைஞர்கள், நாதஸ்வர கலைஞர்கள், பூஜைப் பொருள் விற்பனையாளர்கள், பூமாலை விற்போர், நந்தவனம் காப்போர், பரிசாரகர்கள், நாட்டுப் புறக் கலைஞர்கள், ஓவியக் கலை ஞர்கள், சமய சொற்பொழிவாளர் கள் என கோயில்களுக்கும் பக்தர் களுக்கும் சேவை வழங்குவோர் பலவகையினர் உள்ளனர்.

காலப்போக்கில் போதிய அளவு ஆதரவு இல்லாமல் போனதால் இவர்களில் பலரும் நலிவடைந்து உள்ளனர். அவர்களின் மதிப்புமிக்க திறன்களும் மறைந்துபோகும் நிலையில் உள்ளன. இவர்களின் வாழ்வாதாரத்துக்கான வாய்ப்பு களை விரிவுபடுத்தி திறன், வடி வமைப்பு தொழில்நுட்பம் ஆகிய வற்றை மேம்படுத்துவதற்கான திட்டம் ரூ.5 கோடியில் செயல் படுத்தப்படும்.

தமிழகத்தில் உள்ள தொன்மை யான கோயில்களுக்கு பல நூற் றாண்டுகளுக்கு முன்பு வடிவமைக் கப்பட்ட விலை மதிப்பற்ற உலோக விக்கிரகங்கள், கற்சிலைகள், நிலம், கட்டிடம் போன்ற சொத்து கள் உள்ளன. இவை பற்றிய அனைத்து விவரங்களும் கணினி மயமாக்கப்பட்டு கோயில்களுக் கான தகவல் தொகுப்பு உரு வாக்கப்படும்.

கோயில் சொத்துகளின் அமை விடங்களை புவியியல் தகவல் முறைமை (ஜிஐஎஸ்) மூலம் எளி தாக அறியும் வகையில் வரை படங்களில் குறிப்பிடப்பெறும். புவியிடங்காட்டி (ஜிபிஎஸ்) மூலம் கோயில் சொத்துகள் முறை யாக அளவை செய்து ஆவணப் படுத்தப்படும். கோயில்களில் இணையதளம் மூலம் அறை ஒதுக் கீடு, தங்கத் தேர், அன்னதான நன்கொடை போன்ற சேவைகளு டன் கூடுதல் சேவைகளை பெறுவ தற்கு நடவடிக்கை எடுக் கப்படும்.

செல்போன் எஸ்எம்எஸ் மூலம் இந்த வசதிகளைப் பெறவும், கோயில்கள் பற்றிய முழுமையான தகவல்களைப் பெற படிப்படியாக அவற்றுக்கு வலைதளங்கள் உரு வாக்கப்படும். நிறுவன வளம் திட்ட மிடல் மூலம் கோயில் நிர்வா கத்தை மேம்படுத்த தனியே ரூ.1 கோடியில் மென்பொருள் தயா ரித்து செயல்படுத்தப்படும்.

தமிழக கோயில் நிகழ்வுகளை ஆவணப்படுத்தி படங்கள், காணொ லிகள், பின்னணி இசை கொண்ட பல்லூடக (மல்டி மீடியா) வசதி யுடன் ஒரு நவீன இணைய தளம் ரூ.25 லட்சத்தில் வடிவமைக் கப்படும். ஒரு கால பூஜை வைப்பு நிதித் திட்டம் மேலும் 241 கோயில் களுக்கு விரிவுபடுத்தப்படும். இந்த ஆண்டு 10 ஆயிரம் சிறிய கோயில் களில் பூஜைக்குத் தேவையான உபகரணங்கள் ரூ.2 கோடியே 50 லட்சத்தில் வழங்கப்படும்.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம் 3,700 ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர். இவ்வாறு அறிக் கையில் முதல்வர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x