

லண்டனில் இருந்து லக்சஸ் சொகுசு கார் இறக்குமதி செய்யப்பட்டதில் போலி ஆவணங்களை தயாரித்து சுங்கவரி மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் எம்.நடராஜனை விடுவிக்க நீதிமன்றம் மறுத்துள்ளது.
சென்னை துறைமுகத்துக்கு லண்டனில் இருந்து லக்சஸ் ரக சொகுசு கார் இறக்கு மதி செய்யப்பட்டது. 1994-ம் ஆண்டு தயாரிக் கப்பட்ட இந்தக் காரை 93-ம் ஆண்டு தயாரித்த தாகக் கூறி போலி ஆவணங்கள் தயாரித்து குறைவான சுங்கவரி செலுத்தப்பட்டது.
இதில் ரூ. 1 கோடிக்கு மேல் இழப்பு ஏற் படுத்தியதாகக் கூறி எம்.நடராஜன், வி.பாஸ் கரன், லண்டனைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், அவரது மகன் யோகேஸ் பாலகிருஷ்ணன், இந்தியன் வங்கி கிளை மேலாளர் சுஜரிதா, உதவி மேலாளர் பவானி ஆகியோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
இதில் பவானி அப்ரூவராக மாறினார். பால கிருஷ்ணன் தலைமறைவானார். இதையடுத்து எஞ்சிய 4 பேருக்கும் தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2010-ல் உத்தரவி்ட்டது.
இதே குற்றத்துக்காக அமலாக்கத்துறையும் எம்.நடராஜன், பாஸ்கரன் உள்ளிட்டோர் மீது தனியாக வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் தன்னை விடுவிக்கக்கோரி எம்.நடராஜன் தாக்கல் செய்த மனுவை நேற்று தள்ளுபடி செய்த எழும்பூர் பொருளாதார குற்ற வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி, வழக்கின் விசாரணை வரும் பிப். 2-ம் தேதி முதல் நடைபெறும் என உத்தரவிட்டார்.