

மின் விநியோகம், பகிர்மானம் தொடர்பான விதிகளை மறு ஆய்வு செய்ய குழு ஒன்றை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கிறது. இதில் உறுப்பினராக விரும்புபவர்கள் டிசம்பர் 15-ம் தேதிக்குள் விண்ணப் பிக்கலாம் என்று அறிவிக்கப்பட் டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய செயலாளர் குணசேகரன் வெளி யிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப் பதாவது:
தமிழக மின்சார விநியோகம், பகிர்மானம் தொடர்பான விதிகளை மறு ஆய்வு செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒரு குழு அமைக்கவுள்ளது. இதில் மின்சார வாரியம் மற்றும் நுகர்வோர் தரப்பில் பிரதிநிதிகள் இடம்பெறலாம். மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் கொண்டுவரப்படும் விதிகளை இந்த குழு ஆய்வு செய்து தனது ஒப்புதல் மற்றும் கருத்துகளை மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் சமர்ப்பிக் கும்.
விஷயம் தெரிந்தால் உறுப்பினர் ஆகலாம்
தாழ்வழுத்தப் பிரிவில் வீடுகளுக்கான மின் நுகர்வோர், வணிக நுகர்வோர், தொழில் துறை, விவசாய இணைப்பு ஆகியோர் தரப்பில் தலா ஒருவர் என 4 பேர், உயரழுத்த நுகர்வோர் சார்பில் ஒருவர், திறந்த வெளி மின் தொடரமைப்பு நுகர்வோர் சார்பில் ஒருவர் என மொத்தம் 6 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.
குழுவில் உறுப்பினராக விரும்புபவர்கள் மின்சார உற்பத்தி, விநியோகம் தொடர்பாக உரிய தகவல்களை அறிந்தவராக இருக்கவேண்டும்.
குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்படுபவருக்கு, ஒவ்வொரு ஆய்வுக்குழுக் கூட்டத்துக்கும் நாளொன்றுக்கு ரூ.1,000 செலவுத் தொகையாகவும், 2-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டியில் அவரது இருப்பிடத்தில் இருந்து சென்னை யில் நடக்கும் ஆய்வுக் கூட்டத்துக்கு வந்து செல்வதற்கான ரயில் பயணச் செலவும் வழங்கப்படும்.
டிசம்பர் 15 கடைசி
இக்குழுவில் உறுப்பினராக சேர விரும்புவோர் ‘தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், எண்.19 ஏ, ருக்மணி லட்சுமிபதி சாலை, எழும்பூர், சென்னை’ என்ற முகவரிக்கு டிசம்பர் 15-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் கிடைக்குமாறு அனுப்பவேண்டும்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.